Thursday, June 5, 2008

நினைத்தாலும் மறக்க முடியாதவை

நடந்து வந்த பாதையை
பெரும்பாலும் யாரும் திரும்பிப் பார்ப்பதில்லை
நடந்து கொண்டிருப்பவனுக்கு
அது தேவையில்லை
ஆனால் நடக்க முடியாமல் போனாலோ
இல்லை திரும்பி வர நேர்ந்தாலோ மட்டுமே
அது குறித்து சிந்திக்கிறோம்

புதிய ஒருவரை சந்திக்கும் போது
அவருக்கு நம்மை அறிமுகம் செய்ய வேண்டி வருகிறது
இல்லைபழைய சினேகிதங்களை சந்திக்கும் போது
கடந்த காலத்தில் நடந்தவற்றை நினைத்து சிரிக்கவோ அல்லது
அழவோ வேண்டிய நிலை ஏற்படுகிறது

நல்ல நிகழ்வுகள் குறைவாகவே மனதில் பதிவாகிறது
தாக்கங்களும் வேதனைகளும் மட்டும்
மனித மனங்களின் போக்க முடியாத
கறையாகி அல்லது வடுவாகி
காயமாகி விடுகிறது

வயதாகும் போது
உடலிலும் உள்ளத்திலும் மாற்றம் தெரிகிறது
கண்களிலும்
அடி மனதிலும் தொடர்ந்தும் அதே குணாம்சம் தொடர்கிறது.....

என்னை
திரும்பிப் பார்க்க வைத்த என் உறவுகளுக்கு
என் முதற்கண் நன்றி!

என் மனதை திறப்பதாய்
என்னை சிலுவையில் அறைந்து கொள்ளப் போகிறேன்................

No comments: