Thursday, June 5, 2008

நினைத்தாலும் மறக்க முடியாதவை . 16


"ஐயோ ஒண்ணா சாப்பிடலாமெண்ணுதானே
ஓடி வந்தேன்.
கொஞ்சம் பொறுத்திருக்கக் கூடாதா?" என்று நோகும் போதே

"இல்ல ஆஷா
யாரும் சாப்பிடல்ல."
நீ வரும் வரைக்கும் காத்திருந்தோம் என்று நான் சொன்னதும்

அதானே?
என்று சாப்பாட்டு அறையை எட்டிப் பார்த்தாள்.

அம்மா வந்து
"போதும் ரகளை
வாங்க சாப்பிடலாம்"
என்றதும்
எல்லோரும் எழுந்து
சாப்பாட்டு மேசையை நோக்கிச் சென்றோம்.

நாங்கள் சாப்பாட்டு மேசையில் உட்கார்ந்ததும்

மேசையில் இருந்த மதுபானத்தை
ரேகாவின் அப்பா திறந்தார்.

நான் ரேகாவை பார்த்தேன்.

என்னருகே வந்த ரேகா
"இது கொடகு மக்களின் முறை
விருந்துக்கு யாராவது வீட்டுக்கு வந்தா
இப்படி மது அருந்துவாங்க.
ஆனா எப்பவும் இருக்காது"

"ஓ அப்படியா" என்றேன் வியப்போடு.
இந்தியாவில் இப்படி ஒரு வழக்கம் இருப்பதை
அறிந்து கொண்ட முதன் முறை அது.

"அதுக்காக நீங்க சாப்பிட ஒண்ணும் வேணாம்" என்றாள் ரேகா.

நான் சிரித்தேன்.

"ஜீவன் சாப்பிடுறதில்ல" என்று
ரேகா சொன்ன போது
அவர்கள் வீட்டில் அனைவரும் என்னை பார்த்தார்கள்.

"சிங்கப்பூரில எல்லாம் இருந்திருக்கீங்க?"
என்று என்னை அவள் அப்பா பார்த்தார்.

"சிகரட் கூட ஜீவன் பத்துறதில்ல" என்று
ரேகா சொன்ன போது ஆசா சிரித்தாள்.

"ஆசா தம் அடிப்பியோ?
எனக்காக பார்க்காதீங்க
நீங்க தாராளமா சாப்பிடுங்க" என்று சொல்லி விட்டு
"ராஜா நீ வேணுமுண்ணா கூட சாப்பிடு" என்றேன்.

"இல்ல வேணாம்" என்றான்.

"பரவாயில்ல" என்றேன்
என்னையும் ரேகாவையும் தவிர
அனைவரும் சாப்பிட்டார்கள்.

ரேகா சாப்பிட மாட்டாள் என்பது
எனக்குத் தெரியும்.

சென்னையில் இருக்கும் போது
என் நண்பர்களுடன் போனால்
அவர்கள் மது அருந்துவார்கள்.
அவர்களோடு இருந்து விட்டு
ரேகாவை சந்திக்க போகும் போது
புகைபிடித்த வாசனை கூட என் உடைகளில்
இருக்கும்.

அது குறித்து நானும் எதுவும் சொல்லவில்லை.
அவளும் கேட்கவில்லை.

ஆரம்பத்தில்
நானும் மது அருந்துவேன் என்றே
நினைத்திருந்திருக்கிறாள்.

சினிமா ஸ்டண்ட் நண்பர்கள்
ஒரு முறை
என் வீட்டுக்கு வந்து மது அருந்தினார்கள்.

நான் குடிக்காமல்
அவர்கள் பக்கத்தில் அமர்ந்து
அரட்டை அடித்துக் கொண்டிருந்தேன்.

அன்று ரேகா என்னை பார்க்க வந்திருந்தாள்.

அவளுக்காக நான் மது அருந்தாமல்
இருப்பதாக நினைத்தாள் போலும்
தனியே என்னை அழைத்து
"எனக்காக நீங்க இதெல்லாம் செய்ய தேவையில்ல
உங்களுக்கு விருபமிண்ணா குடிக்கலாம்" என்றாள்.

எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லலை.

"அட பாவமே இங்க பாருங்க
இவ என்னை தப்பு பண்ண சொல்றா..........."என்று
ரேகாவை இழுத்து வந்த போது மலைத்தவர்கள்
திரும்ப சொல்லு என்று
அவள் சொன்ன போது
என் நண்பர்கள்
சிரித்த சிரிப்பை ஒரு போதும் மறக்க முடியாது.

என் நெருங்கிய நண்பன் ஸ்டன்ட் பாபு.
சென்னை எம்ஜீஆர் நகரில் இருந்தான்.
அவன் அப்பாவும் ஸ்டண்டன்ட் மாஸ்டர்தான்.
ஆனால் பாபு
அதிகமாக இணைந்து பணியாற்றியது
கிருபா மாஸ்டர் கூடத்தான்.

பாபு சிரித்தபடியே சொன்னான்.
"ரேகாம்மா
ஜீவன் தப்பான எல்லார் கூடவும் போவாரு : இருப்பாரு
ஆனா இவர் தப்பு பண்ண மாட்டாரு"

இது அவளுக்கு வியப்பாக இருந்தது.

நானும் சினமாக்காரரோடு இருக்கிறேன் என்பதால்
என் மேல் கொஞ்சம் சந்தேகமாகவேதான்
இருந்திருக்கிறாள் என்பதை அவளே சொன்ன போது
என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

"அப்போ குடித்ததே இல்லையா?" என்றாள்.

"இல்ல ரேகா
எங்க வீட்டில யாரும் குடிக்கிறதில்ல.
அதில்லாம கராட்டே செய்ததால
அப்படியான பழக்கம் வரல்ல
இருந்தாலும் ஜப்பானில் இருந்தப்போ
அவங்களோடு குடிச்சிருக்கேன்.
அது ஜஸ்ட் கம்பனி.
ஆனால் எனக்கு பிடிக்காது."
என்ற போதுதான்
நான் மது அருந்தாதற்கான காரணத்தை
அவள் புரிந்து கொண்டாள்.

என் நண்பர்கள்
என் மேல்
அளவு கடந்த பாசமாக இருந்தார்கள்.
வெளியே அவர்கள்
என்னதான் தப்பு பண்ணினாலும்
மோசமானவர்களாக இருந்தாலும்
என்னோடும் சரி
ரேகாவோடும் சரி
மிக அன்பாகவே இருந்தார்கள்.

அண்மையில் கூட பேசும் போது கேட்டாள்
"சென்னைக்கு போனப்போ பாபுவை எல்லாம் பாத்தீங்களா"ண்ணு

"ஏன்" என்று கேட்டேன்.

அவங்கள சினிமாவில பாத்து
ரொம்ப மோசமா நினைச்சிருந்தேன்.
ஆனா அவங்கதான் ரொம்ப நல்லவங்க என்றாள்.

இந்த பிளாஸ்பேக் முடியறதுக்குள்ள
எல்லாரும் கொஞ்சம் ஊத்தி
நிறைய கொட்டியிந்தாங்க.

சாப்பிட்டு விட்டு
அனைவரும் முன் சாலையில்
உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.

இருந்தாலும் வந்த விசயத்தை எப்படி ஆரம்பிக்கிறது
என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தேன்.

ரேகா மெதுவாக காதை கடித்தாள்.

"ராஜாவுக்கு பிடிச்சிருக்காண்ணு முதல்ல கேளுங்க
அப்புறமா ஆசாவை கூப்பிட்டு கேக்கலாம்.
ஆசா இயெஸ் சொன்னா அம்மாவோடு பேசலாம்
இல்லேண்ணா......................" என்று ரேகா சொல்லி முடிக்கிறதுக்குள்ள

"பெங்களூரை சுத்தி பாத்துட்டு
சென்னைக்கு போகலாம்" என்றேன்.

சீரியஸாவா பேசுறீங்க ரேகா சிரித்தாள்.

"என்ன மாப்புள்ளை
பொண்ணை புடிச்சிருக்கா?"
நான் ராஜாவிடம் சிங்களத்தில் கேட்டேன்.

ஏன்னா யாருக்கும் சிங்களம் புரியாது என்பதால்.

புடிச்சிருக்கு என்றான்.

"உனக்கு! ஓகே!
அவளுக்கு எப்படியோ?
நான் ரேகாவிடம் ஓகேயாம் என்றேன்.

சற்று நேரத்தில் டீ வந்தது
அதற்கு பிறகு ரேகாவையும் ஆசாவையும்
ரொம்ப நேரமா காணோம்.

எனக்கு புரிஞ்சுது
ஏதோ இழுபடுதுண்ணு................

நான் ராஜாவை பார்த்தேன்.

அவன் சற்று தடுமாற்றத்துடனே இருந்தான்.

"யோசிக்காதே
இங்க கூட
என்னை ரேகாவுக்கு மட்டும்தான் தெரியும்.
என்னை தவிர யாருக்கும் உன்னை தெரியாது.
ஒரு ஊரில இருந்து இன்னொரு ஊருக்கு
பொண்ணு குடுக்கவே இந்தியாவில யோசிப்பாங்க.
நீ வேற பெல்ஜியத்தில இருக்கே....................
இது டிரைதான்.
திருப்பியும் சொல்றேன்
காரண்டி கிடையாது"

வேதனையோடு தலையை ஆட்டினான்.

கவலைப்படாத
உதை ஒண்ணும் விழாது.
ஏன்னா இவ்வளவு நேரமா உட்கார்ந்து
இருக்கிறதை வச்சு சொல்றேன் என்றேன்.

சற்று வெருண்டு என்னை பார்த்தான்.

"எனக்கு ஓரளவாவது இந்தியா தெரியும்.
ரேகாவுக்கும் என்னை தெரியும்
இதை விட
எங்க அக்கா வீட்டுக்கு ரேகா போயிருக்கா.
அவங்கள எல்லாம் தெரியும்.
ராஜா
இந்தியாவுக்கு இதுதான் உன் முதல் விசிட்.
ரெடியா இரு" என்றேன்

"துரத்தினா ஓடக் கூட தெரியாது மாஸ்டர்" என்றான்.

"எனக்கு மட்டும் என்ன
துரத்தனா ஓடத் தெரியுமுண்ணா நெனைக்கிறே
நானும் பெங்களூருக்கு முதல் விசிட் இதுதான்.
இருந்தாலும்
ஓட எல்லாம் கஸ்டப்படுத்த மாட்டாங்க.
மில்டரியில இருந்தவங்கயில்லையா?
வெடிதான்." என்றேன்.

இல்ல.......... என்றான்.

பெல்ஜியத்தில இருந்து வந்தப்போ
பசையோட சொன்ன கதை எல்லாத்தையும்
திருப்பி கேக்க ஆசையாயிருந்துச்சு.

"பெங்களூர் மாதிரி குளிரா இருக்குமா பெல்ஜியம்?" என்றேன்.

"சும்மா போங்க மாஸ்டர்" என்றவன்
இராணுவ உடையில் இருக்கும் ரேகாவின்
அப்பா போட்டோவை கண் கொட்டாமல் பார்க்கத் தொடங்கினான்.

இதெல்லாம் தெரிஞ்சிருந்தா
இவன் வந்தே இருக்க மாட்டான்
என்று அவன் நிலமையை பார்க்கவே தெரிந்தது.

மாடியிலிருந்து இறங்கி வந்த ரேகா
"என்ன பேசிட்டிருக்கீங்க?" என்றாள்.

"எல்லாம் பெல்ஜியம் குளிரை பத்திதான்" என்றேன்.

"என்ன ஜீவன்.........மேல கொஞ்சம் வந்துட்டு போங்க" என்றாள்.

அவள் பின்னால் மேலே போனால்
ஆசா மொட்டை மாடியில் சற்று கலக்கத்தோடு நிற்பது தெரிந்தது.

"ஆசா என்ன சொல்றா?"

"அவர் யாரெண்ணே தெரியாது
அப்புடீண்ணு யோசிக்கிறா?"

"ஓகே
நீ கீழ போ
நான் பேசிட்டு வர்ரேன்." என்றதும் ரேகா கீழே போனாள்.

நான் பேசத் தொடங்கினேன்.

"இங்க பாரு ஆசா.
இது உனக்கு ஒரு சாக் மாதிரி இருக்கும்.
அது எனக்கும் தெரியும்.
அவன் இங்க வந்ததிலயிருந்து
இந்தியாவில ஒரு பொண்ணை பாத்து
கல்யாணம் பண்ணி கொடுங்கண்ணு உயிரை வாங்குறான்.
அவனுக்கு நான் சொல்லிட்டேன்.
இதெல்லாம் அவ்வளவு ஈசி இல்லேண்ணு?
அதை அவன் இப்போ புரிஞ்சிருப்பான்.
கீழ பயத்தில இருக்கான்"

"ஏன்?"

"உங்கப்பா மில்டரியில இருந்த படத்தை காட்டி
ஓட எல்லாம் முடியாது
விசயம் தெரிஞ்சா வெடிதான் அப்படிண்ணு சொல்லி
வெருட்டிக்கிட்டே இருந்தேன்.
அதுக்குள்ள ரேகா வந்துட்டா.........." என்றேன்.

ஐயோ பாவம் என்று ஆசா சிரித்தாள்.

"நீ சிரிக்கிறதையே
இப்போதானே பார்க்கிறேன்" என்றேன்.

"ஏன் நான் சிரிக்கிறதை பார்க்கவே இல்லையா?"

"எங்க
நீ வந்ததும் வராததுமா எல்லோரும் சாப்பிட்டாச்சுண்ணு கத்தினே?
அப்புறமா ஊத்திக்கிறதிலயும் கொட்டிக்கிறதிலயும் கண்ணா இருந்தே.
சாப்பிடும் போது எல்லாரும் ரொம்ப டிசிப்பிளீன்." என்றதும்

ஆசா வாய் விட்டுச் சிரித்தாள்.

அவள் நோர்மலுக்கு வந்திருந்தாள்.

"ஆசா
உனக்கு மட்டுமில்ல
எனக்கும் இந்த மாதிரி ஒரு நிலை வந்தா
உன்னை மாதிரிதான் ஆயிடுவேன்.
நாளைக்கு நாங்க முழு நாளும் பெங்களூரில இருப்போம்.
பெங்களூரை சுத்தி காட்டுறதா ரேகா சொன்னா.
நீயும் வா.
பழகி பாரு : பேசி பாரு
டைம் எடு
இப்போ ஒண்ணும் சொல்லாதே
அவன் போகட்டும்
உனக்கு அவன் மேல விருப்பம் ஒண்ணு வருதாண்ணு பாரு
வந்தா ஓகே வராட்டிலும் ஓகே
அவனுக்கு உன்மேல விருப்பம் இருந்தா
இன்னொரு முறை வரட்டும்.
அப்புறம் முடிவெடுக்கலாம்?"

"அதில்ல ஜீவன்
எனக்கு ஒரு போய் பிரண்டு இருந்து................."

அவள் தொடங்கியதும்
"இங்க பாரு ஆசா
எனக்குண்ணு தொடங்கினா.......................வேணாம்
நீ தாங்க மாட்டே?"

ஆசா ஆவென்றாள்.

"முதல்ல வாயை மூடு
விபரத்தை உங்க அக்காகிட்ட கேளு...........
கீழ போகலாமா? என்றேன்.

"ஜீவன்................?" என்றாள்

"இப்போதைக்கு அது போகாது
உடனடியாக இறங்குது" என்றேன்.

என் பின்னே ஆசாவும் இறங்கினாள்
மொட்டை மாடியை விட்டு.....................

நினைத்தாலும் மறக்க முடியாதவை . 15


ரேகா வந்து விடுதி அறைக் கதவை தட்டிய பின்தான்
எமது தூக்கமே கலைந்தது.

நல்லா தூங்கீட்டீங்க போல

பார்த்து பார்த்து களைச்சு............என்றதுமே
ரேகா சிரிக்கத் தொடங்கினாள்.

போகலாம் வீட்டில சாப்பாடு ரெடி என்றாள்.

நாங்கள் மீண்டும் ஒரு ஆட்டோவில்
அவள் வீடு இருந்த
விவேக் நகரை நோக்கி பயணித்தோம்

விவேக் நகருக்கும்
நீலசந்ரா எனும் பகுதிக்கும்
இடைப்பட்ட பகுதியில் இருந்த
அவள் வாழும் பகுதிக்கு வரும் போதே
பல் வேறு இன மக்கள் வாழும் பகுதி அது
என்பதை என்னால் உணர முடிந்தது.

நாங்கள் மூவரும்
ஆட்டோவில்
தமிழில் பேசிக் கொண்டு வந்த போது
ஆட்டோ ஓட்டுனர்
"சென்னையில் இருந்து வர்றீங்களா?"
என்றதும் எனக்கு அதிர்ச்சயான மகிழ்சியாக இருந்தது .

"ஆமா
நீங்க தமிழா?"

ஆமா சார்
நான் சின்ன வயசிலேயே
எங்க அப்பா அம்மா கூட
இங்க வந்துட்டேன்.
நான் கூட புரசவாக்கம்தான் சார் என்று
ஆட்டோ ஓட்டுனர் சொன்னார்.

"உங்க பேரு?"

"குமார்"

"புதுசா யாராவது கிடைச்சா
எங்களை மறந்துடுவார்."
என்று ரேகா ஆட்டோ ஓட்டுனரிடம் சொன்னதும்

"இல்ல குமார்
இவங்களுக்கு இவங்க ஊரு நல்லாதான் இருக்கும்.
நீங்க நம்ம ஊருல இருந்து வந்து இங்க இருக்கீங்க.
நமக்கு வித்தியாசமா இருக்கும் இல்லயா?" என்றேன்.

"ரொம்ப அழகான ஊரு சார்.
போறதுக்கு முன்னாடி கொஞ்சம்
சுத்தி பாத்துட்டு போங்க சார்.
சாயங்காலம் ஆனா
கொஞ்சம் குளிரும்.
அவ்வளவுதான்"

"தனியா போறதுக்கு முடியாதுண்ணு நினைக்கிறேன்.
கன்னடம் தெரியாதில்ல"

"ஐயோ
ரொம்ப பேர் தமிழ் பேசுவாங்க சார்.
இங்கிலீஸ் தெரிஞ்சா போதும்
பிரச்சனையே இருக்காது சார் "

"தமிழங்களுக்கு எதிரா
பிரச்சனை எல்லாம் நடந்திருக்கேப்பா?"

"சினிமாக்காரங்களும்
அரசியல்வாதிகளும் செய்யுற கூத்து சார் அது
அந்த நாலு பேரால
எத்தனை பேர் பாதிக்கப்படுறாங்க தெரியுமா?"

அப்பிடியா?

"இப்போ
நீங்க போற இடத்தில கூட
எல்லாரும் கலந்து இருக்காங்க சார்.
கிரிக்கட்டு நடக்கிறப்போ
முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவா இருப்பாங்க
மத்தவங்க இந்தியாவுக்கு ஆதரவா இருப்பாங்க.
அதுவே சில நாளைக்கு பிரச்சனையா இருக்கும்
அப்புறம் மறைஞ்சுடும்.

நடிகர் ராஜ்குமார் மாதிரி ஆளுக
தமிழ் படத்துக்கு எதிரா தேவையில்லாத பிரச்சனை
எழுப்புவாங்க.
நம்ம கூட்டம்
கன்னட படத்து கட் அவுட்டை தூக்கி்ட்டு
அதை விட பெரிய கட்அவுட் வைப்பாங்க.
இல்ல
ஒண்ணை மறைக்கிற மாதிரி
ஒண்ணை வைப்பாங்க.
இன்னும் சில தமிழங்க
வள்ளுவர் சிலை வைக்கணுமுண்ணு
அரசியல் நடத்துவாங்க
போராட்டம் நடத்துவாங்க
இதுல வேற
சென்னையில இருந்து வந்து
இங்க எதையாவது பேசிட்டு போயிடுவாங்க.
அவங்க வாயில வந்ததை பேசிட்டு போயிடுவாங்க சார்
அடி உதை வாங்கிறது இங்க உள்ள அப்பாவி நாங்க.
அதை தவிர வேற பிரச்சனையிண்ணு ஒண்ணும் கிடையாது சார்."
என்றார்.

வரும் போது யோசிச்சேன்.
இப்போ தெம்பாயிட்டேன் என்றதும்
அனைவரும் சிரித்தார்கள்.

"ரொம்ப ஜாலியா இருக்கீங்க சார்"

"இல்ல குமார்
தெரியாத ஒரு இடத்துக்கு போனா
தெரியாதவங்க மூலம் ரொம்ப தெரிஞ்சுக்கலாம்.
வாழ்றது சந்தோசத்துக்காக
கிடைக்கிற நேரம் சிரிச்சிடுணும்
மூஞ்சை தொங்கப் பொட்டுக்கிட்டு இருந்தா
வாழ்கை நரகமாயிடும்" என்றேன்.

"இவர் பேசினா நிறுத்தவே மாட்டார்.
சந்தோசமா இருந்தா இருக்க இடம் கலகலக்கும்
கோபம் வந்தா அந்த இடமே அதிரும்"
என்றாள் ரேகா என்னைப் பற்றி..............

நான் ரேகாவை பார்த்தேன்.

"கோபம் இருக்கிற இடத்திலதான்
குணமும் இருக்குமும்மா" என்றார் குமார்.

ஆட்டோ விவேக் நகரை அண்மித்ததும்
சாப்பிட்ட பிறகு
இந்த ஆட்டோவிலயே திரும்பி போயிடலாமா என்று
ரேகாவிடம் கேட்டேன்.

"இல்ல சார்
நீங்க வேற ஆட்டோவில போயிடுங்க
வெயிட்டிங்கில எனக்கு கொடுக்கிற சார்ஜ்ஜை விட
கம்மிதான் நீங்க போறதுக்கே வரும்.
மெட்ராஸ் மாதிரியெல்லாம்
மீட்டருக்கு மேல எல்லாம்
யாரும் கேக்க மாட்டாங்க சார்"
என்றார் குமார்.

இப்படியான சம்பாசனைகள்தான்
நாம் போகும் ஊர் குறித்த கருத்துகளை
நம் மனதுள் பதிய வைக்கும்.
அதுவும் நம்ம இனத்துல ஒருத்தர் கிடைச்சா
அதுவே ஒரு உறவு கிடைச்சது மாதிரியாகிடும்.
மனசே லேசாக்கிடும்.

குமார் கூட பேசியதில்
மகிழ்வாக இருந்தது.
ரேகா பெங்களூர் குறித்து
என்னதான் சொல்லியிருந்தாலும்
குமாரின் திறந்த பேச்சு என்
கண்களை திறந்திருந்தது.
தேவையற்ற பயத்தை போக்கியது.

நாங்கள் ரேகாவின் வீட்டுக்கு போன போது
அனைவரும் அன்பாக வரவேற்றார்கள்.

தேனீர் பரிமாறினார்கள்.

என்னைப் பற்றி
ரேகா வீட்டில்
ரேகா சொல்லி இருந்ததால்
வீட்டில் அனைவருக்கும் என்னை தெரிந்திருந்தது.

வீட்டில் அனைவரும்
நன்றாகவே தமிழில் பேசினார்கள்.

ரேகாவின் அப்பா
இந்திய இராணுவத்தில் இருந்த போது எடுத்த படங்கள்
வீட்டு சுவரை அலங்கரித்துக் கொண்டு இருந்தன.

அதற்கு அடுத்து அதிகமாக இருந்தது
ரேகாவின் படங்கள்தான்.

எங்கு போனாலும்
வீட்டு எழிலை அழகை ரசிப்பேன்.


போகும் வீட்டில் உள்ளவர்கள் குறித்து
அறிந்து கொள்ள
விளக்கம் எதுவும் சொல்லாமல்
அவர்கள் குறித்து விளக்கம் தருவது
நாம் போகும் வீடுகளில் மாட்டப்பட்டிருக்கும்
புகைப்படங்களும்
தெரியும் புத்தகங்களும்தான்.

அவர்களது குடும்ப படத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தேன்.

ரேகாவின் அம்மா
என்னருகே வந்து

"இது பாகிஸ்த்தான் யுத்த காலத்தில எடுத்த படம்.
இது கடைசி படமா இருக்கும் என்று
நினைச்சிதான் எல்லாரும் சேர்ந்து ஒரு படம்
எடுத்துக்கிட்டோம்.

பக்கத்தில அன்னை இந்திராவோடு இருந்த
படத்தை காட்டி
இந்திரா அம்மா வந்து எங்களை பாதுகாப்பு காரணமாக
வேறு இடத்துக்கு போக சொன்னாங்க.
செத்தாலும் அவர் இருக்கிற இடத்தை விட்டு
போக மாட்டோம் என்று சொன்னேன்.
யுத்தம் முடியும் வரை
அங்கேதான் இருந்தோம் என்றதும்
வியப்போடு ரேகாவின் அம்மாவை
திரும்பி பார்த்தேன்.

அவர் சர்வ சாதாரணமாக
இதில இருக்கிறது அசோக்
வீராட்டில இருக்கிறான்.
இது சின்னவன் அருண் என்றதும்
பக்கத்தில் நின்ற அருண்
அம்மாவை அணைத்துக் கொண்டான்.

இது ஆஷா
இப்போ வந்துடுவா?
ஜீவன் வாறதா முதல்ல ரேகா சொல்லல்ல
தெரிஞ்சிருந்தா லீவு போட்டிருக்கலாம்
என்று கோபமா போனாள்.
அரை நாள் லீவு போட்டு இப்போ வந்திடுவா?

நான் ஏதுவுமே பேசவில்லை.
என்னைப் பற்றியும் எதுவும்
ரேகாவின் அம்மா கேட்கவில்லை.
மீண்டும் போய் நான் அமர்ந்த போது

இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று
சற்று சுகயீனமாகி
அமர்ந்து கொண்டிருந்த அப்பாவை
அரவணைத்துக் கொண்டே
கொங்கினி மொழியில்
ஏதோ பேசிக் கொண்டிருந்த ரேகா
பசியாயிருக்கும் சாப்பிடலாமா? என்றாள்.

ஆஷா வந்திடட்டும் ரேகா
எல்லாரும் ஒண்ணா சாப்பிடுவோம்.
வேணும்ணா
அப்பாவுக்கு நேரத்துக்கு சாப்பிடக் கொடேன் என்றேன்.

அப்பாவிடம் சாப்பிடுறீங்களா என்று ரேகா கேட்க
இல்ல ஆஷா வரட்டுமே என்றார்.

அந்த இடைவெளியில்
பாகிஸ்தான் - இந்தியா வோர் பத்தி
அவரோடு தெரிந்து கொள்ள விரும்பி
நான் பேசிய போது
ரேகாவின் அப்பா ரேகாவை பார்த்தார்.

அவள் ஏதோ கொங்கினி மொழியில்
சொன்ன பிறகே
தமிழிலும் ஆங்கிலத்திலும் சற்று
மனம் திறந்தார்.

பேச்சின் இடையே
தமது இராணுவ வாழ்வு குறித்தும் பேசினார்.

கர்னாடக மாநிலத்து
[url=http://images.google.ch/imgres?imgurl=http://www.boloji.com/places/024a.jpg&imgrefurl=http://www.boloji.com/places/024.htm&h=252&w=220&sz=35&hl=de&start=6&sig2=dYmXsk2BlhOiIZERUMpP_g&um=1&tbnid=6WsCLZnBQFox3M:&tbnh=111&tbnw=97&ei=SrT7RoTuD4WQwAH8tr3XDw&prev=/images%3Fq%3Dkodagu%26svnum%3D10%26um%3D1%26hl%3Dde][size=125]கொடகு(குடகு)[/size][/url]தான் இவர்களது சொந்த ஊர்.
அவர்கள் பேசும் மொழி கொங்கினி.
[img]http://www.madikeri.com/image/kariappa.gif[/img]
இந்தியாவின் முதலாவது இராணுவ ஜெனரல் காரியப்பா அவர்கள்
ரேகாவின் குடும்பத்து உறவு.
பாட்டன் முறை
கூர்க் இனத்தைச் சேர்ந்த
இவர்களது குடும்பமே இராணுவ குடும்பம்தான்.
பல மொழிகள் பேசக் கூடியவர்கள்.
மூத்த மகன் அசோக் கூட
இந்தியாவின் கடற்படைக் கப்பலான
விராட்டில் இருந்தான்.

இவை குறித்து
ரேகாவின் அப்பாவால்தான் அறிய முடிந்தது.
ரேகா ஒரு வார்த்தை கூட சொன்னதே இல்லை.
ஆச்சரியம்தான்?

பேசிக் கொண்டிருக்கும் போதே
ஆஷா வேகமாக வீட்டினுள்ளே வந்தாள்.
வந்ததும் வராததுமாக
ரேகாவை கடிந்து கொண்டாள்.

ஒரே கலகலப்பு.

அமைதியாக
கல்லு பிள்ளையாராக இருந்த
ராஜாவை ஒரு முறை பார்த்தேன்.

அவன்
தலை கால் புரியாமல்
இறுகிப் போயிருந்தான்.

பாருங்க ஜீவன்
நீங்க வரப் போறதா
சொல்லவே இல்ல.
இவ காலயிலதான் வந்து சொன்னா.
ஒரு போண் போட்டிருந்தா லீவு போட்டிருப்பேன்
என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள்.

நான் ராஜாவை
இது என் தூரத்து முறை சகோதரன்.
பெல்ஜியத்திலிருந்து வந்திருக்கிறான்.
பெங்களூரை சுற்றிக் காட்ட அழைத்து வந்தேன்
என்று ஒரு பொய்யை சொன்ன போது
ரேகா மெதுவாக என்னைப் பார்த்து சிரித்தாள்.

நான் ஏதாவது பொய் பேசினா
அது என் மூஞ்சிலேயே தெரியும். :cheese:

பொய் சொல்ற மூஞ்சை பாரு
என்று ரேகா என் காதை கடித்ததும்

என்னைப் பத்தி ஏதோ சொல்றே போல
என்று பதறிய ஆஷா
அவள் உடுத்தியிருந்த சாறி குறித்து
பேசுறோம் என்று நினைத்துக் கொண்டு
ஆஷா
உடுத்தியிருந்த சாறியை காட்டி
இது நீங்க ரேகாவுக்கு சிங்கப்பூரில வாங்கிக் கொடுத்த சாறி
எனக்கு ரொம்ப பிடிச்சுது
அதுதான் நான் திருப்பி கொடுக்கவே இல்ல என்றதும்
தப்பித்தேன் என்று எனக்குள் சிரித்துக் கொண்டேன்.

நிலமையை சமாளிக்க
"நாங்க சாப்பிட்டாச்சு
நீ சாப்பிடு ஆஷா" என்று ரேகா
ஆஷாவை பார்த்து சொல்ல

"ஐயோ ஒண்ணா சாப்பிடலாமெண்ணுதானே
ஓடி வந்தேன்.
கொஞ்சம் பொறுத்திருக்கக் கூடாதா?" என்று நோகும் போதே

"இல்ல ஆஷா
யாரும் சாப்பிடல்ல."
நீ வரும் வரைக்கும் காத்திருந்தோம் என்று நான் சொன்னதும்

அதானே?
என்று சாப்பாட்டு அறையை எட்டிப் பார்த்தாள்.

அம்மா வந்து
"போதும் ரகளை
வாங்க சாப்பிடலாம்"
என்றதும்
எல்லோரும் எழுந்து
சாப்பாட்டு மேசையை நோக்கிச் சென்றோம்...


Kodagu (anglicized as Coorg), a fertile mountainous region of Karnataka blessed with natural beauty, is the birthplace of Kaveri River. Nestled in the Sahyadri Mountains of the Western Ghats, this rugged and hilly region is inhabited by a unique group of people with martial traditions. They are a relatively a small community called Kodavas (Coorgs or Coorgis). The Kodavas have fiercely guarded their tradition and customs as well as their uniqueness. Kodavas are the dominant class living in Kodagu though they only form about 15 to 20 percent of the population. There are 100,000 Kodavas in Kodagu with a total population of 545,000

நினைத்தாலும் மறக்க முடியாதவை . 14



இரவு புறப்பட்ட புகையிரதத்தில்
காலையில் பெங்களூரை
நானும் ரேகாவும் ராஜாவும் அடைந்தோம்.

சென்னையை விட மிக வித்தியாசமாக இருந்தது.
அனைத்தும் வித்தியாசம்
சென்னையின் வேகம் பெங்களூரில் இல்லை.
சற்று அமைதி தெரிந்தது.

சில்லென்று வீசிய மென் காற்று வேறு இதமாக இருந்தது.

வெளியே வந்த போது
இலங்கையிலுள்ள சிங்கள மொழி போலவே
கன்னட எழுத்துகள் சில தெரிந்தன.

கன்னட எழுத்துகள்

சிங்கள எழுத்துகள்

தோற்றத்தில் சில எழுத்துகளில் ஒற்றுமை தெரிந்தாலும்
உச்சரிப்பு வேறாக இருந்தது

புகையிரத நிலையத்தை விட்டு
வெளியே வந்ததும்
ரம்மியமாக இருக்கு பெங்களூர் என்று சொன்னேன்.

பிடித்த ஒன்றை மனசு விட்டு
பேசி பழக்கப்பட்டு விட்டதால்
என் பேச்சு ரேக்காவுக்கு எப்பவும் பிடிக்கும்.
பிடிக்காததை கூட சொல்லிவிடுவேன்.

உண்மையாகவா? என்றாள்.

ஏதோ ஒரு வித்தியாசம் தெரியுது
உண்மையாகவே பிடிச்சிருக்கு என்றேன்.

குளிரை சொல்றீங்களா மாஸ்டர் என்றான் ராஜா

இல்லை
அதிகாலையின் அமைதியான சில்லேன்ற ஒரு அழகு என்றேன்.

பாலுமகேந்திராவின் படங்களில்
எப்படியாவது பல சீன்களை
பெங்களூரில் எடுப்பார் என்றாள் ரேகா.

அப்படியா?
அந்த இடங்களை பார்க்கணுமே? என்றேன்.


பார்க்கலாம்
என்றவள் போகும் போது
வழியில் தெரிந்த
விதானசவுதாவையும் (பாராளுமன்றம்)
பக்கத்தில் இருந்த நூலகத்தையும் பார்த்த போது
கொழும்பு கார்கில்ஸ் கட்டிங்கள்
மனதுக்குள் அலையாக அடித்து சென்றது
கார்கில்ஸ் கட்டிடம் போல் தெரிந்த நூலகம் கொழும்பை நினைவுக்குள் மீட்டியது


அவற்றை எல்லாம் பார்த்து வியந்து நின்ற என்னை
இப்போ
2 நாள் நிக்கப் போறோம்.
நேரே வீட்டுக்கு போய்
அதன் பிறகு விடுதி ஒன்றை பார்ப்போமா?
இல்லை
விடுதி ஒன்றுக்கு போய்
அப்புறமா வீட்டுக்கு போவோமா?
என்று மெதுவாக என் காதுக்குள் முணுமுணுத்தாள் ரேகா.

முதல்ல விடுதி ஒன்றுக்கு போய்
ஒரு குளியல் போட்டுட்டு போறதுதான் நல்லது.
முதல் முறையாக வீட்டுக்கு போகப் போறோம்.
உனக்கு பிரச்சனை இல்லை
நீ பழக்கப்பட்டவள்.


அப்போ வீட்டுக்கு பக்கத்தில இருக்கிற
விடுதி ஒன்றை பார்ப்போம் என்று சொல்லி
ஒரு ஆட்டோவில் மூவரும் ஏறினோம்.

யாரையும் தெரியாமல் ரேகா வீட்டில்
நாங்கள் தங்குவது சரியில்லை என்று
பேசியே விடுதியில் தங்கும் யோசனையை
ரேகாவிடம் சொல்லியிருந்தேன்.

அதன்படி விடுதியை நோக்கி
ஆட்டோவை போகும்படி சொன்னாள்.

ஒரு விடுதியை வந்தடைந்ததும்
ரேகாதான் பேசி பணமும் கொடுத்தாள்.

நானும் ராஜாவும் மெளனம் காத்தோம்.
ஒன்று மொழி தெரியாமை
அடுத்தது வெளியூர்காரர் என்றால்
சுத்திடுவாங்க என்று உணர்வு.

என்னையும் ராஜாவையும்
விடுதி அறையில் விட்டு விட்டு
ரேகா வீட்டுக்கு கிளம்பினாள்.

போகும் போதே
பகல் சாப்பாட்டுக்கு
அழைத்து போக வருகிறேன் என்ற போது

என்ன சாப்பாடு கிடைக்குமோ தெரியாது
என்று கேலியாக சொன்ன போது
சிரித்து விட்டு நகர்ந்தாள்.

நாங்கள் குளித்து விட்டு
ஒரு டீ சாப்பிட்ட பின்னர்
ஒரு குட்டி தூக்கம் போட்டோம்.

ரேகா வந்து கதவை தட்டிய பின்தான்
எமது தூக்கமே கலைந்தது.

நல்லா தூங்கீட்டீங்க போல

பார்த்து பார்த்து களைச்சு............என்றதுமே
ரேகா சிரிக்கத் தொடங்கினாள்.

போகலாம் வீட்டில சாப்பாடு ரெடி என்றாள்.

நாங்கள் மீண்டும் ஒரு ஆட்டோவில்
அவள் வீடு இருந்த
விவேக் நகரை நோக்கி பயணித்தோம்...

நினைத்தாலும் மறக்க முடியாதவை . 13

ராஜா வரட்டும்
ஒரு முறை இருவரும் பார்க்கட்டும்
அதுவரை
நாங்கள் இருவரும் மனதுக்குள் வைத்திருப்போம்
என்று முடிவெடுத்தோம்.

இருந்தாலும்
" உன் மனசுக்கு பிடிக்குதாண்ணு முதலில் பாரு ரேகா" என்றேன்
நாங்கள் இருவரும்
மீனம்பாக்கம் விமான நிலையத்தில் காத்திருந்தோம்

ராஜாவும் சென்னை வந்து இறங்கினான்.

நான் இருந்த வீட்டுக்கு அவனை அழைத்து வந்தோம்.

நான் அப்போது
சென்னையில்
எஸ்.டீ.எஸ். அவர்களுக்கு சொந்தமான பிளாட்டில்
வசித்து வந்தேன்.
அது எஸ்.டீ.எஸ்ஸுக்கு எம்.ஜீ.ஆர் கொடுத்தது
அதை எஸ்.டீ.எஸ்
அவரது அனுதாபியான ஒத்தக் கை புலவருக்கு கொடுத்திருந்தார்.

இயக்கத்தில் இருந்து நான் வெளியான போது
ஏற்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடவும்
என் பாதுகாப்புக்காகவும் அங்கே தங்க வைக்கப்பட்டேன்.

நான் அங்கே தங்கி இருப்பது
என் நெருங்கிய சில இந்திய நண்பர்களுக்கும்
ரேகாவுக்கும் மட்டுமே தெரிந்திருந்தது.
புலவருக்குக் கூட எதுக்கு
தங்கியிருக்கிறேன் என்று தெரியாது.

ஏதோ எஸ்.டீ.எஸ் ஐயாவுக்கு தெரிஞ்சவர்
தங்கியிருக்கிறார் எனும் விடயத்தை விட
புலவருக்கு வேறு ஒண்ணும் தெரியாது.

ராஜா வந்த போது
நானும் ரேகாவும் மீனம்பாக்கம்
விமான நிலையத்துக்கு போய் அழைத்து வந்தோம்.

ராஜாவும் நானும்
பழக்க தோசத்தில்
அதிகமாக சிங்களத்திலேதான் பேசிக் கொண்டோம்.

நாம பேசுறது ரேகாவுக்கு புரியாது
அது வேறு விதமா யோசிக்கத் தோணும்
தமிழில் பேசு என்று பல தடவை சொன்னாலும்
சில சமயங்களில் மட்டும் ராஜா தமிழில் என்னோடு பேசினான்.

அவன் சிங்களத்தில் பேசினால்
நான் அதை தமிழில் ரேகாவிடம் சொல்வேன்.

அவள் பரவாயில்லை என்றாலும்
இல்ல
அது சரி கிடையாது
நாம மூணு பேரில ஒருவருக்கு புரியாத
ஒரு மொழியில ரெண்டு பேர் பேசிக்கிறது அநாகரீகம் என்று
ஒரு முறை ரேகாவிடம் சொல்லப் போய்

"அவர் தமிழ் பேசினாலும் சிங்களம் பேசினாலும்
எனக்கு ஒரே மாதிரிதான் இருக்கு
அவர் பேசுற தமிழ் எனக்கு எங்க புரியுது?"
என்ற போது எல்லோருமா சிரித்தோம்.

அதுக்கப்புறம்
அவன் தமிழ்ல என்னோடு பேசவேயில்லை :cheese:

நான் இலங்கையில் இருந்த போதும்
கராட்டே பயிற்சி கொடுக்கும் போதும்
சிங்களத்தில்தான் அதிகம் பேசுவேன்.
வீட்டில் மட்டுமே கொச்சைத் தமிழில் பேசுவேன்.

எனவே
அவனே என் தமிழ் பேச்சு கண்டு வியந்தான்.
அவன் மட்டுமல்ல
ஒரு முறை சிங்கப்பூரிலிருந்து
இலங்கைக்கு போன போது
என் திரைப்பட ஆசான் கூட
தமிழ் கூட பேசுவியாண்ணு ஒரு முறை ஆச்சரியப்பட்டார்.
அப்போ எல்லாம் அவர்கள்
என்னை
தமிழனாகவே நினைச்சதில்லை :cheese:

சிங்கப்பூரும்
தமிழ்நாடும் என்னை அப்படி மாத்திச்சு.

இப்போ
கலந்த தமிழ் பேசுறதை உணருரேன் :cheese:

ராஜா வந்து என்னோடு தங்கியிருந்த நாட்களில்
தினமும் மாலையில் ரேகா எங்களை பார்க்க வருவார்.
அல்லது
அவர் பணிபுரிந்த மவுண்ட் ரோட்டிலிருந்த
ஆபிசுக்கு போவோம்.

மெரினா கடற்கரையில்தான்
ரொம்ப நேரத்தை நாங்கள் போக்குவோம்.

இதமான காற்று
விதவிதமான மனிதர்கள்
கணவன்-மனைவி குழந்தைகள்
ஒதுங்கி பதுங்கும் காதல் ஜோடிகள்
கடலை வாங்கும்படியும்
ஒரு முழம் பூ வாங்குண்ணா என்று
வரும் சிறுவர் சிறுமிகளும்
மெரீனா கடல் அலையாக வருவார்கள்

நான் அவனுக்கு தெரியாமல்
ரேகாவிடம் கேட்டேன்.

என்ன நினைக்கிறே?

உங்களை நம்பித்தான் இறங்குறேன்.
ஒரு முறை ராஜாவை கூட்டிட்டு பெங்களூர் போய் வரலாம்.
இப்போ ஒண்ணும் சொல்லாதீங்க
ஆசா
ராஜாவை பார்க்கட்டும்
அதுக்கப்புறம் என்ன நடக்குதுண்ணு பார்ப்போம் என்றாள்.

எனக்கு
அவள் சொன்னது சரியாக பட்டது.

அப்போ அடுத்த வெள்ளிக் கிழமை
உன் ஆபீஸ் முடிஞ்சதும் புறப்படுவோம்.
ஞாயிறு இரவு திருப்பிடலாம் என்று சொன்னேன்.

ஓகே சொன்னாள்.

ஒரு வெள்ளி மாலை
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து
பெங்களூரை நோக்கி ரயிலில் புறப்பட்டு
பெங்களூரை அடைந்தோம்.

நினைத்தாலும் மறக்க முடியாதவை . 12


அப்பாராவும்
அந்த போலீஸ்காரனும் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போதே
நான் உறங்கியிருந்தேன்.
என் மனக் களைப்பை விட
புரியாத ஒரு மொழியை தொடர்ந்து
கேட்டுக் கொண்டிருந்ததனால்
ஏற்பட்ட களைப்பு
என்னை தூங்க வைத்திருந்தது

விடியுமுன் சற்று அதிர்ந்து எழுந்த போது
நான் அப்பாராவின் மெத்தையில் தூங்கியிருந்தேன்.

அப்பாராவ்
வெறும் நிலத்தில் அசந்து தூங்கிக் கொண்டிருந்தான்.

வெளியே இருந்த
போலீஸ்காரன் மட்டும்
தூங்காமல் இருப்பதற்காக
புகை பிடித்துக் கொண்டே
எதையோ படித்துக் கொண்டிருந்தான்.

நான் மறுபுறம் திரும்பி யோசிக்கத் தொடங்கினேன்.

தெரியாத ஒருவனுக்குள் உண்டாகும்
அன்பு கூட தெரிந்து பழகியவர்களுக்கு வர மாட்டேன் என்கிறதே?

நல்லவங்களா
உயர்ந்தவங்களா நினைக்கிறோம்
அப்படி நினைச்சு
நம் தனிப்பட்ட விபரங்களை
பகிர்ந்து கொள்கிறோம்

சற்று ஏதாவது ஆகும் போது
அந்த பலகீனத்தை கையிலெடுத்து
எப்படி எல்லாம்
படாத பாடாய் படுத்துகிறார்கள்?

தூரத்தே இருக்கும் போது இருக்கும் மரியாதை
மிக நெருக்மானதும் இல்லாமல் போய் விடுகிறது

நம்மிடம் ஆலோசனை கேட்டு வந்தவங்க
நமக்கே ஆலோசனை சொல்லத் தொடங்கிறாங்க
அதோட நின்னுட்டா பரவாயில்ல
தமது கருத்துகளை திணிக்க வேற முற்படுறாங்க

சரியா இருந்தா
ஏத்துக்கிறதில தப்பே இல்ல
தப்பா இருக்கிறதெல்லாம்
எப்படி சரியாகும்?

ரேகா வீட்டில
பிரச்சனையின் ஆரம்பமே
என் நண்பன் ஒருவனால்தான் ?

அதைக் கூட
நான்தான் விலை கொடுத்து வாங்கினேன்.

அவனை நான் நண்பன் என்றாலும்
அவன் என் கராத்தே சங்கத்தில்
அறிமுகமான ஒரு மாணவன்

நான்
அவனை முதன் முதலாக சந்தித்தது
இன்னுமொரு டோஜோவில்
மாணவர்களை கிரேட் பண்ணுவதற்காக
சென்ற போது....

ஒரு ஆசிரியர் பயிற்றுவிக்கும்
கராத்தே பயிற்சி நிலையத்தில் (DOJO)
அவரது மாணவர்களுக்கு
அதே பயிற்றுனர் (கிரேடிங்) தரம் பிரிக்கமுடியாது.
அதற்காக இன்னொரு பயிற்றுனரை
தலைமையகம் அனுப்பும்

இப்படி போன போதுதான் ராஜாவை சந்தித்தேன்.

ஏகப்பட்ட சிங்கள மாணவர்களுக்கிடையே
ராஜா தமிழனாக இருந்தான்.

1975-80 களில் எல்லாம்
தமிழர்கள் கராத்தே வகுப்புகளுக்கு வருவது குறைவு.

தமிழர்களது முதல் தேர்வு
கல்விதான்.

ஒரு டாக்டராகவோ இன்ஜினியராகவோ வக்கீலாகவோ
தம் குழந்தைகள்
வர வேண்டுமெனும் ஆதங்கம் மட்டுமே
தமிழ் பெற்றோரிடம் அன்று இருந்தது.

விளையாட்டு என்றால் கூட
முதன்மை
கிரிகெட்டாகத்தான் இருக்கும்.

அதற்கு அடுத்துதான் மற்ற எந்த விளையாட்டும்?

1983
இனக் கலவரத்துக்குப் பின்னர்
தமிழரிடையே ஏற்பட்ட மாற்றம்
யாரும் எதிர்பாராதது.

கெடுதல் ஒன்றினால்
ஏற்பட்ட பாரிய மாற்றம்.

அதுவரை ஒரே நேர் கோட்டில் பயணித்த மக்கள் மனதில்
எதுவும் எம்மால் முடியும் என்று
மாறி சிந்திக்கத் தொடங்கிய தருணம்?

யாராவது அடித்தால்
திருப்பியே அடிக்காமல்
வாங்கிக் கொண்டு
நாய் நம்மள கடிச்சா
நாம திருப்பிக் கடிக்கிறதாண்ணு
சொல்லி அன்று சென்ற இனம்?
இன்னைக்கு?

அப்படி இருந்த ஒரு சமுதாயத்தில்
தமிழ் பேசும் ஒருவனை பார்த்தால் மகிழ்வாய் இருக்கும்.
அது தமிழனாக இருக்கட்டும்
இல்லை
அது ஒரு இஸ்லாமியனாக இருக்கட்டும்
பழகிப் போனவர்களை விட
இவர்களை ஊக்குவிக்க தோன்றும்.

அப்படி முதன்மையாக நினைப்பது
ஒரு ஆசிரியனுக்கு தவறாக இருந்தாலும்
100 வேற்று மாணவர்கள் இருக்கும் போது
தமிழ் பேசும் ஒருவனாவது இல்லையே என்ற
ஏக்கத்தின் நடுவே
இப்படி ஒருத்தரை கண்டால்
இப்படி ஒரு எண்ணம்
நம்மை அறியாமலே மனதுக்குள் உருவாகி விடும்.

வெளிநாடொன்றில்
நம்மைப் போன்ற ஒருவனைக் கண்டால்
ஓடோடிச் சென்று தமிழரா? என்று கேட்க மனம் துடிக்கும்!
இல்ல பங்களாதேஸ் என்றால் கூட
உருது பேச தெரியாமல்
ஹாய் என்று தொடங்கி
ஜேர்மன் மொழியில் அல்லது ஆங்கிலத்தில் பேசும் போது
ஒரே ஊரில இருந்து வந்திருக்கான்
ஆனா இரண்டு பேருமே ஜேர்மன்ல ஆங்கிலத்தில பேசுறாங்க என்று
வெளி நாட்டுக்காரன் மனதுக்குள் நகைக்கிறான்.

ஒரு சிலர் வெளிப்படையாகவே சொல்லியும் விடுகிறார்கள்.

முதல் வெளிநாடு என்று சிங்கப்பூர் போன போது
ஜப்பான்காரனுக்கும் சீனனக்கும் உள்ள
வித்தியாசம் தெரியாம முழிச்சேன்.
இங்கே பல மொழி பேசுறவனை கூட
சுவிஸ்காரங்கள் என்றுதான் நினைச்சேன்
அதை விளக்க
அவனுக்கு கிளாஸ் எடுக்கணும்?
அதுவரை அவன் நிக்க மாட்டான்.

இங்க சிலரோடு ஆங்கிலத்தில பேசினா
நீ இருக்கிறது சுவிஸில
ஜெர்மன்ல பேசு என்கிறாங்க.

நம்ம ஜனங்களோ
ஆங்கிலம் தெரிஞ்சாதான் உலகமே மதிக்கும் என்கிறாங்க.

நம்மள்ள ரொம்ப பேர்
இன்னும் கிணத்து தவளை மாதிரி இருக்காங்க.
வெளிய வந்தாதான்
நாம முதல் என்கிறதுக்கு பதிலா
நாம எத்தனையாவது இடத்தில இருக்கிறோம்
என்று தெரியும்?

காந்தி கூட
இந்தியாவிலேயே இருந்திருந்தா
அவருக்கு தேச பக்தியே வந்தே இருக்காது என்று நினைக்க வைக்கிற
கோபம் மனதுக்குள் எழும்.

கோபம் வந்தாலும்
அடங்கிதான் ஆகணும்.
சில நாடுகள்ல பேசினா
வெள்ளை வான் வரும்
ஆட்டோ வரும்
உயிர் கூட மிஞ்சாது
இங்கே உயிராவது மிஞ்சும்?

நாம எதிர்பாராத மாதிரி மனசு மகிழுற
சில நிகழ்வுகள்
நடக்கத்தான் செய்யும்!

பளிங்குச் சிலை போல
ஆயிரம் வெள்ளை இனத்து பொண்ணுகள்
வலம் வந்தாலும்
யாரோ ஒரு பொண்ணு
பஞ்சாபியோடு நடந்து போனால்
பேரழகியாக இல்லாது போனாலும்
ஆயிரத்தையும் விட்டுட்டு
அவளை ஒரு முறை பார்க்கத் தோணும்?
நம்ம ஊரு அழகே தனின்னு
வெளிநாட்டில இருந்து கூட
எண்ணத் தோன்றும்!

இது போலத்தான் ஒரு சில
தமிழ் பேசும் மாணவர்களில் ஒருவனாக
சிங்கள மாணவர்கள் மத்தியில் இருந்து
ராஜா அறிமுகமானான்.

அன்று
கிரேடிங் தொடங்குவதற்கு
1 மணி நேரம் முன்பாகவே
டோஜோவுக்கு நான் போன போது
டோஜோ பூட்டியே இருந்தது.

நேரத்தோடு சென்று காத்திருப்பது
இறுதி நேரத்தில் செல்வதை விட
சற்று ரிலாக்ஸானது.
அடுத்தது
எனக்கு தெரியாத ஒரு இடமானால்
முன்னரே போவது பழக்கமாயிருந்தது.

அடுத்தது
மாணவர்களுக்கு முன்னமே சென்று
சற்று உடலை வோம்-அப் ஆக்கிக் கொண்டு
தயாராக இருக்க வேண்டும் என்பவை
எனக்குள் கடைப்பிடிக்கப்பட்டவை.
[img]http://blogs.newsobserver.com/media/bruce_lee.jpg[/img]
நான் போன போது
டோஜோ பூட்டி இருந்ததால்
அது திறக்கும் வரை நான் பக்கத்து மதிலில் ஏறி
ஒரு வழிப் போக்கன் போல் அமர்ந்திருந்தேன்.

என்னைக் கடந்து போகும்
கராத்தே மாணவர்கள் கூட
என்னை பார்த்து விட்டு போனார்ர்களே தவிர
எவரும் என்னை அடையாளம் கண்டு கொள்ளவில்லை.

சிலரது பேச்சுகள் இளமைத் துள்ளலாகவே இருந்தது.

"ஓரு சரக்குக்காக (பிகருக்காக) காத்து ஒண்ணு காயுதுடா
ஒரு மாவாசி (கிக்) காட்டிட்டு வரட்டுமாடா?"
ஒரு சில மாணவர்கள்
என்னை பார்த்து
பேசி விட்டு போவதை பார்த்தப்போ
உள்ளுக்குள் சிரிப்பாய் இருந்தது.

வாச்மேன் வந்து கதவை திறப்பதை
தூரத்தே இருந்து அவதானித்தேன்.

சிலர் ஊதியை சிகரட்டுகளை ஸ்டைலாக
லாவகமாக வீசி எறிந்து விட்டு
உள்ளே செல்வதும்
சிலர் சூக்களோடு உள்ளே போவதும் தெரிந்தது.

எல்லோரும் உள்ளே போகும் வரை
காத்திருந்தேன்.

எல்லோரும் உள்ளே போனதும்
எழுந்து டோஜோவை நோக்கி
நடந்து சென்று வாயிலை அடைந்ததும்
தோளில் தொங்கிய பையை
கீழே வைத்து விட்டு
குனிந்து சூவை கழட்டும் போது
அனைவரது கண்களும்
என்னை நோக்குவதை உணர்வால் அவதானித்தேன்.

சூவை கதவோரத்திலலேயே விட்டு விட்டு
உள்ளே போய்
"ஆயுபோவன்" (சிங்களத்தில் வணக்கம்) என்று
சொல்லிவிட்டு உள் புகுந்தேன்.

இலங்கையிலுள்ள YMBA ,YMCA போன்ற இடங்களில் உள்ள
டோஜோக்கள் ஒரே விதமான அமைப்புடன்தான் இருக்கும்.

அவை உண்மையில் கராத்தே டோஜோக்கள் அல்ல
மேடையோடு கூடிய ஹால்களைத்தான்
டோஜோவாக பாவிப்போம்.

அங்கே இருக்கும் உடை மாற்றும் அறைக்குள் போய்
உடை மாற்றிக் கொண்டு வந்த போது
பலரது விழிகள் தாழ்ந்து போயிருந்தன.

என்னை ஒரு வழிப் போக்கனாக நினைத்து
அவர்கள் செய்த குறும்புகளே அதற்கு காரணம்.
நான் எனக்குள் சிரித்துக் கொண்டேன்.

இன்னைக்கு இப்படி இருந்தாலும்
அன்னைக்கு நாம என்ன திறமா என்ன?
ஒரு பார்வை விட்டு விட்டு

கையை தட்டி
எல்லோரும் முன்னால வந்து உட்காருங்க என்றேன்.

வந்து அமர்ந்ததும்
என்னை அறிமுகம் செய்து வைத்தேன்.
உங்க பேர்களை சொல்லுங்க............

அவர்கள்
தங்கள் பெயர்களை சொல்லிக் கொண்டு போனார்கள்.

"நீங்க உங்க சூகளை உள்ளதான் வைப்பீங்களா?"

எல்லோருமே ஆமா என்றார்கள்.

அப்போ தவறு இவர்களுடையதில்லை
இருக்கும் ஆசிரியரது என்பது புரிந்தது.

குறித்துக் கொண்டேன்.
அது குறித்து அவருக்கு சொல்லியாக வேண்டும்.

சாதாரணமாக கிறிஸ்தவ கோயில்களுக்கு போகும் போது
சூ போட்டு போகலாம்.
ஆனா ஒரு பெளத்த விகாரைக்கோ
சைவ கோயிலுக்கோ
பள்ளி வாசலுக்கோ போகும் போது
யாரும் சூ போடுறதில்லை.
அதை நாம பின்பற்றுறோம்.
அது போல கராத்தே டோஜாவுக்குள்ளும் நடைமுறையா இருக்கு.
அது ஏன் என்று தர்க்கம் பண்ண நேரமில்லை.

நான் நினைக்கிறேன்
கராத்தேயின் ஆரம்ப கர்த்தாவான போதிதர்மா ஒரு பெளத்தர்.
அந்த நடைமுறை காலா காலமா பின்பற்றப்பட்டு வருது.
இது ஒரு டிசிப்பிளின்
நான் சாதாரணமா டோஜாக்குள்ள சூ கொண்டு வர்றதில்ல.
நீங்க நிச்சயம் நாளைக்கு ஒரு மாஸ்ட்டர் : சென்சாய் ஆகலாம்.
உங்களை வச்சுதான்
உங்க மாணவர்கள் உருவாவாங்க...........................
என்று சொல்லி விட்டு அவர்களை பார்த்தேன்.

அத்தனை பேரும் எழுந்து போய்
சூக்களை வெளியே வைத்து விட்டு வந்தார்கள்.

நன்றி சொல்லி விட்டு
உடற்பயிற்சிகளை செய்து விட்டு
வோம் அப் ஆனதும் கிரேடிங் செய்யலாம் என்றேன்.

உடற்பயிற்சிகளை அவர்களோடு சேர்ந்து
செய்யும் போதே அனைவருக்குள்ளும் இருந்த
தூரம் விலகிப் போவதை உணர்ந்தேன்.
அது எனக்கு எப்போதும் தேவை என உணர்வேன்.

கிரேடிங் குறித்து பயப்படாதீங்க
நீங்க கற்றதைத்தான் கேட்பேன்.
புதிதா வராது?
தவறிச்சுட்டுண்ணு தெரிஞ்சா
உடனே கையை உயர்த்துங்க
இன்னொரு வாய்ப்பு தருவேன்.
அடுத்தவங்களை திரும்பி பார்க்காதீங்க
என்று கூறிவிட்டு கிரேடிங்கை ஆரம்பித்து : முடித்தேன்.

அனைவரும் நல்லாவே செய்தார்கள்.
ஒவ்வொருத்தரை உருவாக்குவதுதான்
ஒவ்வொரு ஆசிரியரது கடமையாக வேண்டுமே தவிர
அடுத்தவரை வீழ்த்துவதல்ல.

ஒரு சில தவறுகளை சுட்டிக் காட்டி
இதை இப்படி செய்திருக்க வேணும்.
பயிற்சி செய்யுங்க.
யோசிக்காதீங்க
எல்லாருமே நல்லா செஞ்சீங்க என்றதும்
முகத்தில் மகிழ்வு தெரிந்தது.

அடுத்தவர் மகிழ்வை ரசிக்கும் போதும்
அவங்களோடு சோர்ந்து மகிழும்போதும்
மனதுக்குள் ஏற்படும் புத்துணர்ச்சியே
ஒரு தனி ரகம்.

எல்லாம் முடிந்து டோஜோவை விட்டு
வெளியே வந்த போது
எல்லோருமே
மாஸ்டர் டீ சாப்பிட்டு போறீங்களா? என்றதும்
அவர்களோடே கேலியா பேசிக்கிட்டு
ஒரு உணவகத்தை நோக்கி போனோம்.

இவர்களை கண்டதும்
உணவகத்திலிருந்தவர்கள் அதிகம் பேசவில்லை.
சொன்னதும் டீ கொண்டு வந்து வைத்தார்கள்.

என்ன எல்லாருமே கப்சிப்பா இருக்காங்க
என்று கேட்டதும்
ராஜாதான் வாய் திறந்தான்.

உணவகத்தில் ஒரு தகராறு நடந்த போது
இவர்கள் எல்லோருமே
தகராறு செய்தவர்களை சாத்தியிருக்கிறார்கள்.
அதை அவன் விபரித்தான்

அந்த பயத்தின் தன்மை அங்கே தெரிந்தது

கராத்தே பார்வைக்கு சண்டை போல இருந்தாலும்
இது ஒரு தியானம்
பலமானதால
அப்பாவிளை பிரச்சனை பண்ணக் கூடாது.
நமக்கு ஏதாவது வரும் போது பரவாயில்ல.
ரவுடி டைப்பாக ஆகிடக் கூடாது.
காலையில கூட எனக்கே மாவாசி கேரி (Roundhouse kick)
காட்டிட்டு வரட்டுமான்னு யாரோ சொன்னாங்க.
என்று சிரித்தேன்.

சொன்னவன் தலையை சொறிந்தான்.

பாத்தா தெரியாது
மோதினா நிலமை விவகாரமாகிடும்.
நாம
எதுவும் செய்யலாம்
ஆனா
நாலு பேராவது அது நியாயமுண்ணு சொல்லணும்.
இல்லேண்ணா ரவுடியாதான் நினைப்பாங்க என்றதும்

ராஜா ஏன்டா பெரிய தனமா சொன்னோம் என்றவாறு
இல்ல...........என்று தொடங்கி நிறுத்தினான்.

நடந்ததை மாற்ற முடியாது
இனி கவனமா நடங்க என்று சொல்லி விட்டு
வந்தேன்.

நான் போகுமிடங்களில்
இப்படியான நட்புகள் உருவாகும்.
இப்படி யாரோடும் பேசுவதால்
என்னை அவர்களும்
அவர்களை நானும் மறப்பதில்லை

ராஜா பின்னர்
நான் கற்பிக்கும் டோஜோக்களுக்கு வரத் தொடங்கினான்.

நான் இலங்கையை விட்டு
சிங்கப்பூர் செல்லும் போது
என் மாணவர்களில் திறமையான
பயிற்றுவிக்கக் கூடிய திறமையுள்ளவர்களுக்கு
வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்து விட்டு சென்றேன்.

1983
இனக் கலவரத்துக்குப் பின்
ராஜா நாட்டை விட்டு வெளியேறக் கூட
பணத்தால் உதவினேன்.

அவன்
பெல்ஜியத்துக்கு வந்து இருந்தான்.
இடையிடையே
அவன் மடல் வரைந்தான்.

ஐரோப்பா குறித்த எந்த விபரமும்
நான் அறிந்திராத சமயம் அது.
அவன் சொல்வதை நம்பினேன்.

ஒரு மடலில்
தனக்காக ஒரு இந்திய பெண்ணை பார்த்து
மணமுடித்து தரும்படி கேட்டிருந்தான்.

அதை அங்கிருந்து செய்ய முடியாது.
இந்தியா வந்தால் பார்க்கலாம்
என்ற நிலையில் அதை
ரேகாவிடம் சொன்ன போது
ரேகாவின் தங்கை குறித்து
இருவரும் நினைத்தோம்.

ஆனால்
ராஜா வரட்டும்
ஒரு முறை இருவரும் பார்க்கட்டும்
அதுவரை
நாங்கள் இருவரும் மனதுக்குள் வைத்திருப்போம்
என்று முடிவெடுத்தோம்.

இருந்தாலும்
" உன் மனசுக்கு பிடிக்குதாண்ணு முதலில் பாரு ரேகா" என்றேன்.

தேவையற்று
ஏதோ ஒன்றுக்குள் மூக்கை நுழைத்ததனால்
இனிதாய் இருந்த எமக்குள்
பிரச்சனைகள் உருவாகத் தொடங்கியது....................

நினைத்தாலும் மறக்க முடியாதவை . 11


நான் அந்த பொன்னான
காலத்தை எல்லாம் இழந்தவன் போல
விறைத்துப் போய் நின்ற போது

"என்ன சார்
கல்லாயிட்டே?"
என்ற அப்பாராவின் குரல் என்னை
அவன் பிடித்துக் கொண்டிருந்த
சிறைக் கம்பியை எட்டிப் பார்க்க வைத்தது

திரும்பி அப்பாராவை பார்த்த போது
என்னை அறியாமலே
வேதனை
பெருமூச்சாக வெளியாயிற்று

"என்ன சார் யோசிக்கிறே?" அப்பாராவ் பரிவோடு கேட்டான்.

ஒண்ணுமில்ல
என்றவாறு மீண்டும் எழுந்து சற்று நடந்தேன்.

போலீஸ்காரன் எதையோ அப்பாராவிடம் கன்னடத்தில் சொன்னான்.

"சார்............இங்க வா சார்" என்று அதட்டலாகவே
அப்பாராவ் அழைத்தான்.

நான் அவனை நோக்கி வந்தேன்.

"என்ன ஆச்சுண்ணு மூஞ்சை தொங்கப் போட்டுகிட்டே?
எதுக்கும் பயப்படாதே
நான் உன்னை காப்பாதுரேன் சார்.................
என்னை உனக்கு தெரியாது
இந்த காக்கிகிட்ட கேளு
அப்பாராவ் சொன்ன சொல் தவற மாட்டான்"
அவனது பேச்சில் காரம் : கடுப்பு மட்டுமல்ல
அன்பும் கலந்தே வந்தது.

"சார்
அப்பாராவுக்கு வெளியில பயங்கர செல்வாக்கு சார்.
அப்பாராவுக்கு ஏனோ உன்னை பிடிச்சிருக்கு சார்"
என்றான் அந்த போலீஸ்காரன்.

நான் மாட்டிக் கொள்ளக் கூடிய
பல விடயங்கள் அறையில் இருந்தன.
அவை மாட்டினால் நான் கோவிந்தாதான்.
அதை எண்ணியே பயந்து இறுகிப் போய் இருந்தேன்.

இப்போது
யாரையும் முழுமையாக நம்ப தயாராக இல்லாத மனசு எனக்கு.
இருந்தாலும் அப்பாராவின் நடத்தை
முற்றிலும் வேறாக இருந்தது.

"இந்த வலியில கூட
என்னை பத்தி யோசிக்கிறியே?" என்றேன்.

"இல்ல இன்ஜினியர் சார்
உன்னை பார்த்தாலே பாவமா இருக்கு சார்" என்றான்

இந்த இன்ஜினியர் சார் எல்லாம் வேணாம்
ஜீவன் என்று கூப்புடு என்றேன்.

"எனக்கு அதுதான் புடிக்கும்
எனக்கு ஒரு இன்ஜினியர்
சிங்கப்பூர் இன்ஜினியர் பிரெண்டுண்ணு சொல்லிக்கணும்.........."
என்று குழந்தை போல சிரித்தான்.

ரவுடித் தனத்திலும்
அவன் பச்சை புள்ளை மனசு வெளிப்பட்டது.
அது அவனது திருப்தி

"தூக்கம் வருதா
வெளிய பென்ஜு வலிக்கும்
உள்ள வந்து
என் பெட்டுல தூங்கு இன்ஜினியர் சார்.
நான் கீழ படுத்துக்குவேன்"

அவன் பாசமாக
ஒரு அண்ணன் போல்
வார்த்தைகளால் இப்போது அரவணைத்தான்.

உள்ள வர முடியுமா?

"தொறந்து விடு
சார் தூங்கட்டும்.........." என்றதும்
மறு பேச்சே இல்லாமல்
வெளியே இருந்த போலீஸ்காரன்
ரிமான்ட் கதவை திறந்து விட்டான்.

நான் உள்ளே போனதும் கதவை தாழிட்டான்.

அவனுக்கு ஒரு பெட் கொடுக்கப்பட்டிருந்தது.
அதில் போய் உட்காந்தேன்.

"இன்ஜினியர் சார்
தப்பா நினைச்சுக்காத
உனக்கு பொண்ணா கிடைக்காது
அந்த பொண்ணு உனக்கு இனியும் வேணுமா?"

இவ்வளவு பண்ணினதுக்கு பிறகுமா?
ஊகும்.................நான் தலையாட்டினேன்.

"அப்போ
அவங்க இருக்க அட்ரஸ் குடு
நாளைக்கு யாரும் போலீஸுக்கு வர மாட்டாங்க"

எப்படி அப்பாராவ்?

"நீ உள்ள இருக்கே சார்.
அவங்கள குடும்பத்தோட
இன்னைக்கு ராத்திரியே
போட்டு தள்ளிட சொல்றேன்"

யோவ்..........பைத்தியகாரன் மாதிரி பேசாத
என்று எழுந்திருக்க முயன்ற என்
கையை பிடித்து உட்கார வைத்தான் அப்பாராவ்.

"இன்னமும் லவ்வாதான் இருக்கே?"
சிரித்தான்
"நாளைக்கு முடிவு அவ கையில இருக்கு
அதை மறந்திடாத.........................."

அப்பாராவ்
எனக்கு அவளை தெரியும்.
அப்படி செய்ய மாட்டா?
ஒரு வேளை யாராவது
அவளை பிரேன் வாஸ் செய்திருப்பாங்க.
நாளை காலையில இசக்கு பிசகா நடந்தா
நீ நினைக்கிறதை நான்தான் செய்வேன்

"உன்னைதான்
உள்ள போட்டுடுவாங்களே?" மீண்டும் சிரித்தான்

அதனாலென்ன
நான் திரும்பி வராமலா இருப்பேன்.
அது 6 மாசமாகட்டும்
இல்ல
6 வருசமாகட்டும்
சாவு என் கையாலதான்
யாரும் செஞ்சா அதனால எனக்கு
தூக்கம் வராது
அது என்னால நடக்கணும்
அப்போதான் எனக்கு தூக்கம் வரும்

அப்பாராவ் என்னை ஒரு மாதிரயாக வெறித்து பார்த்தான்.

"இந்தா பாருடா
அப்பாவிண்ணு நினைச்சேன்
சார் சாமி ஆடுறதை"
என்று சிரித்தான்.

நான் அதற்கு பின்னர் எதுவும் பேசவில்லை
நிலத்தை வெறித்து பார்த்தேன்.

"நாளைக்கு இல்ல
அதுக்கப்புறமானாலும் பரவாயில்ல
இன்ஜினியர் சார்
பெயில் எடுக்கணுமுண்ணாலும்
எது வேணுமுண்ணாலும் நான்தான் செய்வேன்."

ஓகே

"இன்னையில இருந்து
உன் பிரச்சனை என் கையில
இனி நான்தான் எல்லாமே.
உன் விபரம் பூரா எனக்கு தெரிய வரும்"

அவனை வியப்போடு பார்த்தேன்

"எல்லா இடத்திலயும் ஆள் இருக்கு.............
இப்போ தூங்கு.................."
அவன் கடுமையாக தெரிந்தான்.

நான் அவனோடு தொடர்ந்து பேச விரும்பவில்லை.
கீழே போடப்பட்ட மெத்தையில் சாய்ந்தேன்.

அவன்
என்னைப் பற்றி
அந்த போலீஸ்காரனிடம் நிறையப் பேசிக் கொண்டிருந்தான்.
இடையிடையே இன்ஜினியர் சார்
என்பதை விட மற்றவை எதுவுமே புரியவில்லை.

காலையில நடக்கப் போறதுக்கு
முகம் கொடுக்க தயாரானேன்.................

நினைத்தாலும் மறக்க முடியாதவை . 10


அப்பாராவ்
நடக்க முடியாமல் நடந்து வந்தான்
இல்லை
அந்த இருவரும் தள்ளிக் கொண்டு வந்தார்கள்

நானும் வருவதை எதிர் கொள்ளத் தயாரானேன்.

நான் ரெடி....................

அப்பராவை கொண்டு வந்து விட்டு விட்டு
அடுத்து என்னைத்தான் இழுத்துக் கொண்டு
போகப் போகிறார்கள்.

நான் பென்சில் உட்கார்ந்து நடப்பதை
பார்த்துக் கொண்டிருந்தேன்.

என் மன நிலை
இப்போது கடுமையாகிக் கொண்டு வந்தது.

அவர்கள் என்னை நெருங்கும் போதே
அப்பாராவின் முனங்கல் வந்ததே தவிர
அவனது பேச்சு வரவில்லை

என் பக்கத்தில் இருந்த
போலீஸ்காரன் எழுந்து
செல்லைத் திறந்து விட்டான்

அவர்கள் அப்பாராவை
செல் உள்ளே தள்ளி விட்டு
என்னை பார்த்தார்கள்.

"உனக்கும் நாளைக்கு இதுதான்
ஏதோ படிச்சவனா இருக்கிறே?
அதனால தப்பிட்டே.........."
தடியன் போல் இருந்த ஒரு போலீஸ்காரன் சொன்னான்.

நான் ஒன்றும் பேசவில்லை
அமைதியாக அவனை பார்த்து விட்டு
கீழே பார்த்துக் கொண்டேன்.

என் பக்கத்தில் இருந்த
போலீஸ்காரனிடம் எதையோ
நீண்ட நேரம்
பேசி விட்டு அவர்கள் நடந்தார்கள்.

பக்கத்தில் இருந்த போலீஸ்காரன்
"குடிக்க ஏதாவது தேவைண்ணா கேளுங்க சார்" என்றான்.

ஊகும்..................
வேண்டாம் என்று தலையாட்டினேன்.

"உங்க தகுதிக்கு இதெல்லாம் தேவையில்ல சார்?"

அவனிடம் இருந்து வந்த மரியாதையான வார்த்தை புதிராய் தெரிந்தது.

அப்பாராவ் மெதுவாக செல் கம்பி ஓரத்துக்கு வந்து
"நான் படிக்காதவன் சார்
நீ ..............................
சே................உனக்கெல்லாம் இது தேவையா சார்?"
என்றான்.

அப்பாராவ்
உன் கிட்ட என்ன பேசண்ணே தெரியல்ல?
எனக்கு வலிச்சுது................. என்றேன்.

"அட போ சார்
இது மாதிரி அப்பன்ட அடி எல்லாம் வாங்கியிருக்கேன்.
இது என்ன................."என்று அவன் சொன்ன போது
அவனை விட எனக்கே வலித்தது.

நான் அவனை கேள்விக் குறியாக பார்த்தேன்.

"நாளைக்கு என்னை பிரிசினுக்கு கொண்டு போகப் போறாங்க
அதுக்கு முன்னாடி லாடம் கட்டி
எதை எல்லாமோ ஒத்துக்க வைக்க பார்க்கிறாங்க...........
அதுதான் வேற ஒண்ணுமில்ல"

நான் அவன் முகத்தை வியப்போடு
பார்ப்பதற்காக முகத்தை உயர்த்திய போது

"நீ என்ன இன்ஜினியரா சார்?"
என் அருகே இருந்த போலீஸ்காரன் குறுக்கிட்டான்.

என்னை அது அதிரவே வைத்தது.

நான் என்னைப் பற்றி யாரிடமும் சொல்லவேயில்லை.
இது எப்படி இவனுக்கு தெரிந்தது
புருவத்தை உயர்த்தி
யார் சொன்னது? என்றேன்.

"போலீஸ் உன் ரூமை செக் பண்ணினப்போ
உன் சர்ட்டிபிக்கேட் எல்லாம் கிடைச்சிருக்கு
நீ சிங்கப்பூரில இன்ஜினியரா இருந்திருக்கே
டீவில இருந்திருக்கே......................
நாளைக்கு
சிங்கப்பூருக்கு போண் போட்டு விசாரிக்க போறாங்க..................
வந்தவங்க சொன்னாங்க" என்று
அவன் தொடர்ந்து பேசிக் கொண்டு போன போது
யாரிடம் என்ன கேட்கப் போறாங்களோ?
அவங்க என்ன சொல்லப் போறாங்களோ?
என்று மனசு பதறத் தொடங்கியது

"ME பண்ணியிருக்கியாமே சார்?"
என்று போலீஸ்காரன் கேட்ட போது
அவன் பேச்சில முன்னை விட மரியாதை தெரிந்தது.

ஆமா என்று
தலையை ஆட்டி பெருமூச்சு விட்டேனே தவிர
பேச வரவில்லை.

"சினிமாண்ணே?"

அது ஆசையில மனசுக்குள்ள வந்தது.
அதில ஒரு பைசா கூட சம்பாதிக்கல்ல
விருப்பம்......................
அவ்வளவுதான்


வீட்டில அத்தனை பேரின்
ஆசைக்கு இன்ஜினியர் ஆனாலும்
எதிர்ப்புக்கு
மத்தியிலும் வலிந்து பகுதி நேரமா
சினிமா நாடகம் என்று கற்றுக் கொண்டதாலோ என்னவோ
உடல் முழுதும் பரவியிருந்தது
கலை மோகம்தான்

யுனிவசிட்டியில இருக்கும் போது
உலகத்தை மாத்தணும் என்கிற வெறி
காலமாக்ஸ் : எங்கெல்ஸ் : லெனின் : சேகுவேரா
இவங்களை படிக்கிற வெறி
அதை படிச்சிட்டு
அவங்க மாதிரி புரட்சி பண்ணனும்
என்கிற தோழமையுடன் இருந்த நண்பர்களின் நட்பு

இதெல்லாம் செய்யணுமுண்ணா
மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தணும் எனும்
லெச்சரர்களின் அறிவுரைகள்

பிரச்சனைகள் உள்ள இடங்களில
வீதி வீதியா போட்ட
வீதி நாடகங்கள் : தெருக் கூத்துகள்
அதற்கான பட்டறை பயிற்சிகள்
பல்கலைக் கழக போராட்டங்கள்
அதை நிறுத்த வரும்
போலீசாரோடு அடிதடி போராட்டங்கள்

அநியாயம் நடக்கும் தொழிலாளர்களை
சந்தித்து விழிப்புணர்வு வகுப்புகள்
அவர்களது உரிமைகளை வென்றெடுக்க
அவர்களை ஊக்கப்படுத்திய பங்களிப்புகள்

மாணவர் போராட்டங்கள்
விழிப்புணர்வு குறித்து பத்திரிகை : சஞ்சிகைகள்
எல்லாமே கமியூனிச சித்தாந்தங்கள் வழி
எமக்குள் ரத்தத்தோடு
சிகப்பு நிறமாக மட்டுமல்ல சிகப்பு சிந்தனைகளும்
செந்நிறமாய் உட் புகுந்தன

பாட்டாளி மக்கள் குறித்த சிந்தனை
சமதர்ம நோக்குகள்
அரசியல் மாற்றங்கள்
ஜாதி ஒழிப்புகள்
மூட நம்பிக்கை தகர்ப்புகள்
அனைத்தும் மாணவர் கையில் என்ற நம்பிக்கை
வேகம்............
பயமறியா வேகம்

இவை அனைத்தும்
பல்கலைக் கழகங்களில் இருந்த போது
நம்மை அறியாமல் நமக்குள் உள் வாங்கின

உலகத்தை மாத்தணுமுண்ணு
போராடிய அனைவரும்
BE முடிச்சு வெளியே வந்த போது
அனைவருக்கும் வேலையில்லா பிரச்சினை!

கால்மாக்ஸ் வரல்ல
லெனின் வரல்ல
எங்கெல்ஸ் வரல்ல
சேகுவேரா வரல்ல

அனைத்து நண்பர்களுக்குள்ளும்
பிரச்சனைகள் தலை தூக்கிச்சு

எதையாவது செய்ய
மந்திரிகளின் சிபார்சு மடல்களுக்காக
மந்தி(குரங்கு)கள் போல
அவங்க மதில்களில் நண்பர்கள்
காவல் காத்து தவம் இருந்தப்போ
ரொம்ப பேர் பல்கலைக் கழகத்தில்
செய்த போராட்டங்களை மறந்தே போனாங்க

பலர்
தன் பெற்றோரை வாழ வைக்க
ஏதாவது செய்யணும் எனும் நிலைக்கு தள்ளப்பட்ட போது
ஆட்சிக்கு வரும்
ஏதோ ஒரு அரசியல் கட்சிக்கு
வேலை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டாங்க

பல இளைஞர்கள்
புரட்சிவாதிகள் எனும் பெயர்
இல்லாமல் போய்
பயங்கரவாதிகளாக்கப்பட்டு கொல்லப்பட்டாங்க

இங்கு
லெனினோ - மாக்ஸோ
வேலை வாங்கிக் கொடுக்க
உயிரோடு இல்லை.
அந்த பணக்கார வர்க்கத்து அரசியல்வாதிகளால்
மட்டுமே அது முடிஞ்சுது................

தொடர்ந்து பலரால் படிக்க மனமிருந்தும்
குடும்பம் அவர்கள் முன்
வறுமையோடு இருப்பதை காணும் போது
இது போதும்டா
ஒரு வேலை எடுத்துட்டு
அப்புறமா படிக்கிறேன் என்று போனவன்களில
பலர் கம்யூனிச தத்துவங்களை
மறந்து லஞ்ச ஊழல் கூட செய்தாங்க

அதை செய்யிறதுக்கு
நல்லா பேசக் கூடிய பயிற்சி மட்டும்
கார்ல்மாக்ஸ்:லெனின்: எங்கெல்ஸ் :மாவோ:டால்ஸ்டாய்
போன்ற புத்தகங்கள் வழி பலருக்கு கிடைச்சிருந்துச்சு

நான் தொடர்ந்து படிக்க தொடங்கிய போது
முன்னைய போராட்ட நண்பர்களில்
அநேகர் பல்கலைக் கழகத்தை விட்டு
வெளியேறி விட்டனர்.

இருந்த சிலரிடம்
முன்னைய வீரமும்: விவேகமும் குறைந்தே போயிற்று
புதியவர்களுடன்
முன்னைய தோழர்கள் போல
எதையும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை

வெளியேறிய
நண்பர்களின் மாற்றம்
விடுபடல்
தூரம் எல்லாமே
மிஞ்சி இருந்த எமக்குள்ளும்
தளர்வை ஏற்படுத்தி இருந்தது

ME கற்கும் போதே
முன்னைய போர் குண திறன்கள்
அனைத்தும்
கலைக்குள் விதையானது......................

நான் அந்த பொன்னான
காலத்தை எல்லாம் இழந்தவன் போல
விறைத்துப் போய் நின்ற போது

"என்ன சார்
கல்லாயிட்டே?"
என்ற அப்பாராவின் குரல் என்னை
அவன் பிடித்துக் கொண்டிருந்த
சிறைக் கம்பியை எட்டிப் பார்க்க வைத்தது...

நினைத்தாலும் மறக்க முடியாதவை . 9


போலீஸ்காரர்களின் குண இயல்புகளை
அவன் சொன்ன போது
மனதுக்குள் சற்று தடுமாற்றம்

இவர்கள் எனக்கு உதவுகிறார்களா?
இல்லை
என்னை ஏதோ ஒன்றுக்கு
பயன்படுத்தப் பார்க்கிறார்களா?

இவன் சொல்வது பொய்யல்ல.
அவனது பேச்சை கேட்டு
சீனிவாசனின் முகம் ஏன் விகாரமடைய வேண்டும்?

ஏதோ நடக்கிறது

நடப்பது எதுவானாலும் நடக்கட்டும்
என்ற முடிவு மனதுக்குள் எழுந்தது.

தலைக்கு மேலே
வெள்ளம் போனால்
சாணென்ன முழமென்ன?

இறுதியாக எது வந்தாலும்
முகம் கொடுப்பதெனும்
முடிவுக்கு வந்தேன்

"என்ன அமைதியாகிட்டே?"
உள்ளே இருந்தவன் பேசினான்.

ஒன்றுமில்லை
தலையை ஆட்டிக் கொண்டே
சிரிப்பை வரவழைக்க முயன்றேன்.

அவன் என்னை வியப்போடு பார்த்தான்.

உன் பெயர் என்ன?

"அப்பாராவ்"

உன் பேர் சொல்லி அழைக்கலாமா?

அவன் சிரித்தான்.

எனக்கு ஒருத்தர் பேர் சொல்லி அழைச்சுதான் பழக்கம்.
அதுதான் கேட்டேன்?

"உன் விருப்பம்.
ஆனால் எல்லாருமே என்னை பாஸ் என்றுதான்
கூப்பிடுவாங்க"

இப்போது எனக்கு உண்மையிலேயே சிரிப்பு வந்தது.

"ஏன் சிரிக்கிறாய்?"

ஒரு சிங்கம் காட்டில இருந்தா ராஜா
அதே கூட்டில இருந்தா................?

"ரொம்ப வாய் பேசுறியே?"

இல்ல அப்பாராவ்
உன்னை பாஸ் என்று கூப்பிட சொன்னே
அதனாலதான் அப்படி சொன்னேன்.

"அது தப்பா?"

தப்பில்ல அப்பாராவ்.
நான் கூட இதைவிட பலமா இருந்துருக்கேன்.
பயமென்றால் என்னென்றே தெரியாது.
சின்ன வயசில இருந்தே சாவுக்கு பயப்படாதவன்.
வாழணுமுண்ணு நினைச்ச பிறகுதான்
பிரச்சனைகள் துரத்துது
என்று சொல்லி விட்டு ஒரு பெரு மூச்சை உதிர்த்தேன்.

"அப்போ?"

அது ஒரு காலத்தோடு முடிஞ்சுது என்று நினைச்சேன்
திரும்ப அதை தொடங்கிடுவேனோ தெரியாது

"நீயும் என்னை மாதிரியா?"

சே.........சே...........
என்று பேச முற்படும் போது
சில போலீஸ்காரர்கள் கீழே இறங்கி வரும்
சத்தம் கேட்டதும் என் பேச்சை நிறுத்திக் கொண்டேன்.

அவர்கள் என்னைப் பார்த்து
ஏதோ கன்னடத்தில் பேசிக் கொண்டார்கள்.

அவர்களைப் பார்த்ததும்
அப்பாராவ் பேசாமல் இருந்தான்.

அவர்கள் அப்பாராவின் செல்லைத் திறந்து
அவனை வெளியே வரச் சொன்னார்கள்.

அவன் வெளியே வந்ததும்
அவனது கன்னத்தில் ஒரு அறை விட்டார்கள்.

அவன் எதையோ சொன்னான்.

அப்பாராவின் கழுத்தை பிடித்து
அவர்கள் தள்ளிக் கொண்டு போனார்கள்.

நான் செய்வதறியாது நின்றேன்.

பக்கத்தில் இருந்த போலீஸ்காரனிடம்
எங்கே அப்பாராவை தள்ளிக் கொண்டு போகிறார்கள்
என்று கேட்டேன்

"அவனை லாடங்கட்டப் போறாங்க" என்றான்.

அப்படி என்றால் என்ன என்று கேட்க நினைத்த போது
அப்பாராவின் ஓலம் என் காதுகளுக்கு கேட்டது.

அவனை அழைத்துப் போய் அவனை அடிக்கிறார்கள்
என்பதை மட்டுமே உணர முடிந்தது

எனக்குள் மிருகம் ஒன்று புகத் தொடங்குவது புரிந்தது.

இலங்கை காடுகளில் ஆயுதங்களோடு திரிந்து
இனி சாவுதான்
இனி சாவுதான் என்று
போய்
போய் திரும்பி வந்த
அந்த நிமிடங்கள் மீண்டும்
எனக்குள் உருக் கொடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதை
உணர்ந்தேன்.

இனி அஞ்சக் கூடாது.
எது வந்தாலும் முகம் கொடுக்க வேண்டும்.

என்றோ ஒரு நாள் சாவு வரும்
அது இன்று வந்தாலென்ன
நாளை வந்தாலேன்ன

அடுத்த பலிக்கடா
நானாக இருக்கலாம்
சரி
அது நடக்கட்டும்
என்னைத் அடிக்கும்
என்னை இந் நிலைக்கு தள்ளும் எவனுக்கும்
என்னால்தான் சாவாக வேண்டும்

அதை எனக்குள் உறுதியாக்கிக் கொண்டேன்.

அப்பாராவின்
ஓலம் நின்று சற்று நேரத்துக்கு பின்
மீண்டும் யாரோ வரும் சத்தம்................

அப்பாராவ்
நடக்க முடியாமல் நடந்து வந்தான்
இல்லை
அந்த இருவரும் தள்ளிக் கொண்டு வந்தார்கள்

நானும் வருவதை எதிர் கொள்ளத் தயாரானேன்.

நான் ரெடி....................

நினைத்தாலும் மறக்க முடியாதவை . 8


உங்களை கேஸ் ஏதும் போடாம வெளியில விடுறதுக்கு
நினைச்சிக்கிட்டு இருந்தார்.
இப்ப பாருங்க.............
என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கக் கூடாதா?
யார் அந்த ஆளு?
அந்த ஆளு வந்தா
அவனையும் உள்ள போடணுமுண்ணு கோபத்தில இருக்கார்
என்று சீனிவாசன் வந்து சொன்ன போது
என்னிடம்
இருந்த பலமும் இல்லாமல் போச்சு ...............

இதென்னடா
இதை முன்னமே சொல்லியிருந்தா
நான் மாகாகிட்ட
வக்கீல பார்க்க சொல்லியே இருக்க மாட்டேனே?

அவன் என்ன சொல்லி
வக்கீல் பேசினாரோ
ஒண்ணுமே புரியாம சீனிவாசனை
தலை நிமிர்ந்து பார்த்த போது

"நான் என்னென்னவோ
பேசி வச்சிருந்தேன்.
நீங்க கெடுத்துட்டீங்க" என்றார்

எனக்குள் ஒரு குற்ற உணர்வு.............

"வாங்க..............
கதிர் சார் கூட பேசுங்க"

அவர் முன்னால் நடக்க
நான் அவரைத் தொடர்ந்தேன்.

உள்ள போனதுதான் தாமதம்
"உன்னை பார்க்க யார் வந்தா?
வரட்டும்............"
பொறுப்பதிகாரி கதிர் ஏதேதோ
கத்திக் கொண்டே போனார்.

எனக்கு எதுக்கு இப்போ இப்படி கத்துறார்
என்றே புரியவில்லை.

சார்
எனக்கு தெரிஞ்சது ரேகா மட்டும்தான்.
வந்தது கூட என் பக்கத்து ரூம் பிரெண்டு
அதுதான்.................
என்னை எப்படியும் வெளியில எடுண்ணு
சொன்னேன்.

"அதுக்கு முன்ன ஒரு வார்த்தை கேட்டிருக்கணும்"என்றார்

இதென்னடா
ஏதாவதுண்ணா வக்கீல வச்சுதானே
வெளிய எடுப்பாங்க.
சினிமாவுல எல்லாம் அப்பிடித்தானே வருது.
இதென்ன புதுக் கதை
என்று எனக்குள் நினைக்கும் போதே

நான் விட்டிருப்பேன்.
எனக்கு மேல ஒருத்தர் இருக்கார்.
அவர் வேற அவங்க ஊர்காரர்.
அதுதான் .............பிரச்சனை
அதுக்குள்ள நீ.................
என்று பொரிந்து தள்ளினார்.

கத்துறார்..........

நல்ல மனுசன் மாதிரியும் இருக்கார்
ஒண்ணுமா புரியல்ல
தலை கால் புரியமாட்டேன்னு சொல்வது
இதுதானோ என்பது போல இருந்தது எனக்கு

"இப்போ எல்லாமே அவ கையிலதான் இருக்கு
அவ உன்னை தெரியாதுண்ணு சொன்னான்னு வை
உன் கதி அதோ கதிதான்"

அவளால என்னை தெரியாதுண்ணு சொல்ல முடியாது சார்.

"யோவ்
அப்போ இதில என்ன எழுதியிருக்கா?
என்ன எழுதியிருக்கா?
உன்னை தெரியாது
யாரோ ஒருத்தன் பின்னாடி வாரான்ணுதானே?"

நான் பேசாமல் அமைதியானேன்.

"நீ டைகர்ணு வேற எழுதியிருக்கா
உண்மையா?"

சத்தியமா இல்ல சார்

"நீ சிங்கப்பூர்ல இருந்தேண்ணு எப்படி நம்புறது?"

ரேகாவே சிங்கப்பூரில
எங்க அக்கா வீட்டுக்கு வந்திருக்கா சார்.

"இவ்வளவும் செஞ்சிட்டு
இப்போ நடிக்கிறாவா?
தே.........யா
இருந்தாலும் உன்னை இங்க இருக்க விடக் கூடாது.
உன்னை உள்ள போட்டாத்தான் சரி" என்றவர்

சீனிவாசனிடம் கன்னடத்தில் ஏதோ சொல்லி விட்டு
"போ.........போ" என்றார்.

கதிர் சார் அறையை விட்டு வெளியேறி நடந்த
சீனிவாசனை பின் தொடர்ந்து நடந்தேன்.

கீழே இருக்கும் ஏதோ ஒரு இடத்துக்கு
என்னை அழைத்து போவது தெரிந்தது.

அது ஒரு குகை போல இருந்தது.

உள்ளே இறங்கி சற்று போகும் போதே
ஒரு வித மணம்
அது நாற்றம்
எனக்குள் அருவருப்பைத் தந்தது.

நடந்து செல்லும் போது
ரிமாண்ட் செல்களில் சிலர் இருப்பது
கப்பிகளுக்குள்ளால் தெரிந்தது

எனக்கு நடக்கப் போவது தெளிவாக விளங்கியது

சற்று தூரத்தே இருந்த போலீஸ்காரர்
சீனிவாசனைக் கண்டதும்
எழுந்து சல்யூட் அடித்தார்.

அந்த போலீஸ்காரர் இருந்த இடத்தை
நாங்கள் நெருங்கியதும்
செல்லில் இருந்த ஒருவன்
சீனிவாசனை நோக்கி ஏதோ கத்தினான்

சீனிவாசனும் ஏதோ கத்தினார்

அவன் எந்த பயமுமில்லாமல்
சீனிவாசனை நோக்கி கத்திக் கொண்டே இருந்தான்

சீனிவாசனின் முகம் சிவந்திருந்தது

எனக்கு ஒரு மண்ணும் விழங்கவில்லை

அதன் பின்
அந்த போலீஸ்காரரிடம் மட்டும் ஏதோ சொல்லி விட்டு
என்னிடம் கூட பேசாமல் நடந்தார்.


உட்காரு சார்
என்று ஒரு பென்ஞ்சை காட்டினார் அந்த போலீஸ்காரர்.

நான் எதுவுமே பேசாமல் அதில் அமர்ந்தேன்.

"கதிர் சார்
உள்ள போட வேணாம் என்றாராம்" என்றார்.

உள்ளே இருந்த அந்த ஆள் கம்பி அருகே வந்து
என்னை நோக்கி பேசினான்

"என்ன பண்ணிட்டு வந்தே"

ஒண்ணுமில்ல

"அப்போ
இவனுக பைசா பறிக்க பார்க்கிறானுகளா?
ஒரு பைசா குடுக்காத..............." என்று பேசத் தொடங்கியதும்

என் பக்கத்திலிருந்த போலீஸ்காரர் கன்னடத்தில் ஏதோ சொல்ல

"அடடா............நீயா அது
யாரோ டெரரிஸ்ட்டை புடிச்சிட்டாங்கண்ணு சொன்னாங்க
அது நீயா?
நீ என்னமோ பச்சை புள்ள மாதிரி இருக்கே............."

ஒருவனை பார்த்ததும் எடை போடும் அவன் திறன் கண்டு
ஒரு கணம் வியப்பாக இருந்தது.

"பேரு என்னா?"

ஜீவன்

"மேரே ஜீவன் சாத்தி "
என்று பெரிதாக சிரித்தான்.

"பகல் சாப்பிட்டியா?"

இல்ல

"காலையில............"

ஆமா

"பகலைக்கு எனக்கு சாப்பாடு வரும் போது
உனக்கும் வரும்...............
என்ன வேணும் சொல்லு
இவனுக அடி தாங்கிறதுக்கு நல்லா சாப்பிடணும்"
என்று சொல்லி விட்டு
அந்த போலீஸ்காரரிடம் ஏதோ கன்னடத்தில் சொன்னான்.

இல்ல..................என்று நான் இழுக்கும் போதே

"இந்தா நிக்கிறானே இவன்...........வந்தவன்..........பெரியவனுக
எல்லாமே என்கிட்ட பிச்சை எடுக்கிற நாய்கள்
நான் மாசா மாசம் பைசா குடுக்கிறன்
என்னை பார்த்தா என்ன
என் பேரை கேட்டாலே பெங்களூரே அதிரும்
தாதாண்ணா தெரியுமா?
வெளிய போயி அப்பாராவ்ண்ணு கேளு
அப்போ என்னை பத்தி தெரியும்
போலீஸ்காரணுக என்டாலே
நன்றி கெட்ட நாய்கள்
ஏதோ கொலை கேஸுல
யாரையோ புடிக்க முடியாம
என்னையே கொண்ணாந்து போட்டிருக்காணுக................
இவனை எல்லாம் நம்பாத
புரியுதா?................
ஒண்ணு
அணைச்சு கேப்பாணுக
இல்ல
அடிச்சு கேப்பாணுக
உயிரே போற மாதிரி தெரிஞ்சாலும்
இல்லேண்ணா
இல்லேண்ணே சொல்லு
என்னை நம்பு................"

என்ற போது
எனக்குள் உதறல் எடுத்தது...

நினைத்தாலும் மறக்க முடியாதவை . 7



மாகா போவதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

இபபோது
என்னுள் சற்று ஆறுதல்.

என்னைத் தெரிந்த ஒருவருக்காவது
நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியும்...................

நான் கீறீன்லண்டுஸுக்கு வந்த போது
மாகா
பக்கத்து அறையில் இருப்பதை கண்டேன்.

ரேகா
என்னை கொண்டு வந்து
அறையில் விட்டுப் போகும் போது
எதிரே வந்தவன்
என்னைப் பார்த்து தமிழா என்றான்
ஆம்
என்று தலையாட்டி சிரித்து விட்டு உருவான நட்புதான் அது.

மற்றுமொரு அறையில்
கிருஸ்ணன் என்று ஒரு மலையாளி வேற இருந்தான்.
அவன் கூட
மாகாவோடுதான் இருப்பான்.

சில நாட்களில் நெருக்கம்
நட்பாகி விட்டது.

நான் அறையில் தனியாக இருந்தால்
நாங்கள் சேர்ந்தே இருப்போம்.
எங்காவது போவோம்.

ரேகா
தினசரி மாலையில் என்னைத் தேடி வருவாள்.
அப்போது மட்டும்
அவளோடு பேசிக் கொண்டிருப்பேன்.
அல்லது
அவள் எங்காவது என்னை அழைத்துச் செல்வாள்.

முக்கியமாக
என்னை ஏதாவது ஒரு
நல்ல ஹொட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்று
சாப்பாடு வாங்கித் தருவாள்.

மொழி தெரியாமல்
ஹொட்டல்களுக்குப் போய்
நான் ஒன்றை நினைத்து கேட்க
அவர்கள் எதையோ கொண்டு வந்து வைக்க
பல வேளைகளில் அரை பட்டினிதான்

எனவே
ஒரு நேரமாவது
நல்ல சாப்பாடு சாப்பிட வைப்பாள்.

அவள் சென்னையை விட்டு
பெங்களூருக்கு மாற்றலான பின்னர்
5-6 மணிக்குள் வேலையை முடித்துக் கொண்டு
நேராக என்னிடம்தான் வருவாள்.

இரவு 9-10 மணி வரை
என்னோடு இருப்பாள்.

அந்த சில மணி நேரம்தான்
நான் மகிழ்வாக கழிக்கும் நேரம்.........
மொழி புரியாத ஒரு இடத்தில்
நான் மாட்டிக் கொண்டது
இது இரண்டாவது முறை

கிறீன்லான்டில் பணிபுரிபவர்கள்
தமிழ் பேசுவதால் ஓரளவு நிம்மதி.
சாப்பாடு எல்லாம் ரொம்ப மோசம்
அதனால் வெளியே எங்காவது சாப்பிட்டால்தான் உயிர் வரும்

கிறீன்லான்டில்
இட்லி : தோசை
இதைத் தவிர எல்லாமே
மகா மட்டமாக இருக்கும்
டீ கூட தண்ணி சூடா
ஏதோ நிறமா தெரியும்

அதிலிருந்து மீள
ரேகா இல்லாத போது
இந்த நண்பர்கள் தயவு இருந்தது.

பின்னர்
ரேகாவும் இவர்களுக்கு அறிமுகமானாள்.

சில வேளைகளில்
அது இனியதாக இருக்கும்
பல வேளைகளில் அதுவே
பெரும் துன்பமாக அமைந்துவிடும்.

ஏதாவது தனியா பேசணும்
என்று நினைத்துக் கொண்டிருந்தால்
அன்று இவர்களும் சேர்ந்து விடுவதால்
எங்கள் பாடு ரொம்ப திண்டாட்டம்.

இதனாலேயே
என்னை ரேகா
மகாத்மா காந்தி ரோட்டிலிருந்த
அவள் ஆபிஸுக்கே வந்துவிடச் சொல்லுவாள்.

நானும்
அங்கே போயிடுவேன்.
அங்கிருந்து எங்காவது என்னை அழைச்சுப் போவாள்.

எங்க போனாலும் ஆட்டோதான்.
ஒரு இடத்தில இருக்கிறதை விட
ஆட்டோவுல பயணம் செய்யிற நேரம்தான் அதிகம்.

இதனாலயே
நான் வெளியே போயிடுவேன்.

இவர்களோடு
ரொம்ப நெருக்கமான நட்பா இல்லாது போனாலும்
மாகாவும் கிருஸ்னணும் நல்ல நண்பர்கள் மாதிரி

நாலு நாளைக்கு முன்னதான்
கிருஸ்ணன் கேரளா போனான்.
அவன் இவனை விட ரொம்ப விவரமானவன்.

அவன்
பேசியே எதையும் சாதிக்கக் கூடியவன்.
அவனோடு பழகிய போதுதான்
மலையாளிகளின் திறன் தெரிந்தது.

எதுவுமே
தெரியாது அல்லது முடியாது என்ற வார்த்தையை
அவன் வாயிலிருந்து கேட்டதே இல்லை.
ரொம்ப பொஸடிவ்வாவே இருப்பான்.

மாகா அப்படியில்லை.
தன் காதலி பிரச்சனையை தீர்க்க முடியாம
ரேகாகிட்டேயும் என்கிட்டேயும்
சொல்லி நொந்து கொண்டேயிருப்பான்.

ஆனாலும் யாருக்கும் கெடுதல் நினைக்காத மனசு.

நேரம் காலம் தெரியாம
எங்க அறைக்கு வந்தா
இருண்ணும் சொல்ல முடியாது
போண்ணும் சொல்ல முடியாது

நான் அவஸ்தைபடுவேன்.

ஏண்ணா
ரேகா என் கிட்ட வர்ற
அதே நேரந்தான் இவனும்
அவன் ஆபீஸ் விட்டு வருவான்.
வரும் போதே என் அறையைத்தான் தட்டுவான்.
ரேகாவும் அப்பதான் வந்து டீக்கு ஆடர் கொடுத்திட்டு
உட்காருவாள்.

டீக்கு சொல்லலாமா?
என்றவாறு கதவை தட்டுவான்.

அப்புறமென்ன
உட்கார்ந்தா
அவன் எழும்பவே மாட்டான்.

ரேகா
கடிகாரத்தையும் என்னையும் பார்ப்பா.

அது கூட புரியாம அவன் இருப்பான்.
இல்ல அவன் ஆபீஸில அவன் செய்த பராக்கிரமங்களை
சொல்லிக்கிட்டு இருப்பான்.

ஒண்ணும் சொல்ல முடியாம நான் அவளை மெதுவா பார்ப்பேன்.

தினமும் நடக்கிற கூத்து இது.

வீட்டுக்கு போகப்போகும்
அவளை விட்டு வர கீழ
இறங்கி வரும் போது
" மத்தவங்களைப் பத்தி கொஞ்சம் கூட
யோசிக்காத இவர் கூட எந்த பொண்ணு
பிரச்சனை இல்லாம இருப்பா"
என்ற வார்த்தைகள் ரேகாவிடமிருந்து
மென்மையாக வந்தாலும்
அதில் கோபம் இருக்கும்.

அவள் கடுமையாக பேச மாட்டாள்.
அமைதியாக இருப்பாள்.
அதுதான் ரொம்ப கடுப்பா இருக்கிறதின் அறிகுறி.

அவளை ஆறுதல்படுத்த நான் சொல்வது
"நாளைக்கு உன் ஆபீஸ் கிட்ட வந்திடுறேன்" என்பதுதான்.

போலீஸ் ஸ்டேசனில்
என்னிடம் ஏதோ சொல்லிட்டுப் போறான்.
இப்ப போய்
என்ன சொதப்ப போறனோ என்றும்
மனதில் தோன்றியது.

இருந்தாலும்
என்னை தேடி இருக்கானே?
அது பெரிய விசயம்.
அது உண்மையில் ஆறுதல்

இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போதே
என்னை நோக்கி வந்த சீனிவாசன்
"என்ன செஞ்சீங்க.........." என்றார் சற்று கோபமாக

நான் ஒன்றும் புரியாமல் விழித்தேன்.

உங்களை பார்க்க வந்த ஆள்
ஒரு வக்கீலை பார்த்திருக்கார்.
அவர் போண் பண்ணி கதிர் சாரோட பேசியிருக்கார்.
கதிர் சார் இப்போ செம கடுப்புல இருக்கார்

ஏன்?

உங்களை கேஸ் ஏதும் போடாம வெளியில விடுறதுக்கு
நினைச்சிக்கிட்டு இருந்தார்.
இப்ப பாருங்க.............
என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கக் கூடாதா?
யார் அந்த ஆளு?
அந்த ஆளு வந்தா
அவனையும் உள்ள போடணுமுண்ணு கோபத்தில இருக்கார்
என்றார் சீனிவாசன்.

இருந்த பலமும் இல்லாமல் போச்சு எனக்கு....

நினைத்தாலும் மறக்க முடியாதவை . 6


கதவு திறக்கப்படும்
சத்தம் கேட்டதும்
எழுந்து கொண்டேன்
காலை நேரம் அது என்பதை உணர்த்துவது போல
சூரிய வெளிச்சம் அறையின் இருளை போக்கி
என் கண்களை கூசச் செய்தது.

முழு இரவும்
மனதை போட்டுத் தாக்கிய தாக்கம்
என் உடலின் தளர்ச்சியில் தெரிந்தது.

கதவைத் திறந்து கொண்டு
கையில் டீயோடு வந்தார் சீனிவாசன்.

தூங்க முடிஞ்சுதா?

உம்.......

இரவு வீட்டுக்கு போக இருந்தப்போதான்
உங்களை பிடிக்கப் போக சொன்னாங்க.
சும்மா
வேலையில்லாத ஒண்ணுக்காக
பெரிய ரகளையே பண்ண வச்சுட்டா அந்த பொம்புளை.
இருந்தாலும்
நீங்க ரொம்ப அதிஸ்டசாலி
என்று சொல்லிக் கொண்டே
கையிலிருந்த டீயை நீட்டினார்.

"சாப்பிடுங்க"

பல் துலக்காமல் எதுவும் சாப்பிட மாட்டேன்.
இருந்தாலும் தாங்ஸ் என்று வாங்கி
மெதுவாக உறிஞ்சினேன்.

நான் மட்டும் வராம இருந்திருந்தா
இன்னைக்கு அரை உசிராத்தான் இருப்பீங்க.
இரவிரவா பந்தாடியிருப்பாங்க.

சீனிவாசன் சொன்ன போது
இரவில் கேட்ட அந்த மனிதனின் அலறல்
என் எண்ணத்தில் அலையாக மோதிச் சென்றது.

நான் நிலத்தை பார்த்தவாறே டீயைக் குடித்தேன்.

கதிர் சார்
மட்டும் இதில இன்வோல்வ்வா இருந்தா
நான் ஏதாவது சொல்ல முடியும்
அவருக்கு மேல இருக்கவர்கிட்ட விசயம் போயிடுச்சு
அதுதான் பிரச்சனை

மெதுவாக அவரை நோக்கினேன்.

அவர் கொடகுகாரர்.
அந்த தே........க்களும் அவங்க ஊரு.
அவர் என்ன செய்வாருண்ணு தெரியாது.
கதிர் சார் சொன்னா கேப்பார்.
இருந்தாலும்......................
என்று தலையை சொறிந்தவர்
எதுக்கும்
முகத்தை கழுவிக்கிட்டு வெளிய உட்காருங்க
என்ற படி வெளியே போனார் சீனிவாசன்.

சற்று நேரத்தில் வந்த
ஒரு போலீஸ்காரர்
என்னை வெளியே அழைத்துப் போய்
முகம் கழுவ ஒரு குழாயைக் காட்டினார்.

முகத்தைக் கழுவிக் கொண்டு
கர்ச்சிப்பால் துடைத்துக் கொண்டே
அவர் பின்னால் நடந்தேன்

அவர் ஒரு இடத்தைக் காட்டி
இங்கே உட்காரு என்றார்.

நான் உட்கார்ந்தேன்.

இரு புறமும் போலீஸ்காரர்கள்.

நான் உட்கார்ந்து கொண்டிருப்பதை பார்க்கும் பலர்
ஏதேதோ பேசிக் கொண்டார்கள்.

எனக்கு எதுவுமே புரியவில்லை.

அதற்குள் என்னை நோக்கி வந்த சிலர்
என்னை புகைப்படம் எடுக்கத் தொடங்கினார்கள்.

நான் ஏன் என்று கேட்க
ஒரு டெரரிஸ்டடை பிடிக்கப் போக இருப்பதாக
நேற்று பேசிக் கொண்டார்கள்.
நீதானாமே அது
என்றவாறு கமராவால் கிளிக் பண்ணத் தொடங்கினார்கள்.

நான் என்ன செய்வதென்று தெரியாமல்
விழித்துக் கொண்டிருந்தேன்.

அந்நேரம் பார்த்து
அவ்விடத்துக்கு வந்த சீனிவாசனிடம்
என்னைப் பற்றியும்
என்னிடம் கைப்பற்றிய ஆயுதங்கள் குறித்தும்
கேள்விகள் கேட்க
கடுப்பாகிப் போன சீனிவாசன்

யோவ்
இந்த ஆளு சிங்கப்பூர்காரர்யா.
இந்த ஆளு கொண்டாந்த பணத்தை எல்லாம் கறந்துட்டு
ஒரு பொம்பளை
இப்படி கம்பிளைண்ட் கொடுத்து
நாடகமாடுதுய்யா
என்ற கத்த

அப்படியா
அவ யாரு சார்
அது பத்தி சொல்லு சார்
என்று மேலும் கடுப்பேத்தினார்கள்
அந்தப் பத்திரிகைக்காரர்கள்.

நான் மீண்டும் மெளனமானேன்.

சீனிவாசன்
இங்க வாங்க என்று
அவர்களை அழைத்துக் கொண்டு போன போது
என்னை அறியாமலே
ஒரு பெருமூச்சு வெளியானது

அதன்பின்
யாரையும் பார்க்க மனசில்லாமல்
நிலத்தை பார்த்தவாறு நான் உட்கார்ந்திருந்த போது
என் முன்னே ஒருவர் வந்து நிற்பது தெரிந்து
தலையை தூக்கினேன்.

கிறீன்லண்ஸில் பக்கத்து அறையில் இருந்த மாகாலிங்கம்
நின்று கொண்டிருந்தார்.

மாகாவை கண்டதும் எழுந்திருக்க முயன்ற போது

இரு ஜீவன் என்று என் தோளில் அழுத்தி
இருக்க வைத்து விட்டு
அவனும் உட்கார்ந்தான்.

என்ன ஆச்சு?

எனக்கு தெரியாது மாகா.
நேத்து ராத்திரி வந்த போலீஸ்
அறையில குண்டு வச்சிருக்கிறதா புகுந்து
இங்க கொண்டு வந்துட்டாங்க

அப்புறம்?

ரேகாவும்
அவங்க அம்மாவும்தான் இதுக்கு காரணமா தெரியுது.
ஆனா முழுசா என்ன ஏதெண்ணு ஒண்ணும் புரியல்ல.

காலையில பசங்க
சாரை ராத்திரி போலீஸ்
புடிச்சுட்டு போனாங்க என்றாங்க.
நான்
எந்த ஸ்டேசன்னு தெரியாம
எல்லா இடத்துக்கும்
போண் போட்டு தேடினேன்.
கடைசியா இங்க இருக்கேண்ணு தெரிஞ்சுது.

தாங்ஸ் மாகா என்ற போது
என் பேச்சு அதற்கு மேல் வரவில்லை.

டேய் பயப்படாதடா.
நல்ல காலம் இன்னைக்கு சனிக்கிழமையாச்சு
அதனால வேலைக்கு போகல்ல.
அது சரி
ரேகாவை பாத்தியா?

இல்லடா!

அப்போ
எப்படிடா அவ உன்னை மாட்டி விட்டாண்ணு சொல்றே?

என் பாஸ்போட்டெல்லாம் அவ கையிலதான் இருந்துச்சு.
அதெல்லாம் இப்போ போலீஸ் கையில இருக்கு என்று
நடந்த விபரங்களை சொன்னேன்.

டேய்
ரேகா வீட்டு அட்ரஸை குடு
நான் போய் எப்பிடியாவது பேசுறேன்
என்றான் மாகா.

இல்ல மாகா
நான் சாகாம மட்டும் தப்பினேன்னு சொல்லு
அவங்க எல்லாரையும் சாகடிக்காம விடமாட்டேன்.

டேய் பைத்தியகாரன் மாதிரி பேசாதடா.
அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்
எப்படியும் உன்னை வெளிய எடுக்க பார்க்கிறண்டா
என்றான் மாகா.

அவன் வார்த்தைகள் ஒரு வித பலத்தை தந்தது.

என் பிரெண்டு ஒருத்தன்
கிரிமினல் லாயர்.
அவனை சந்திச்சு பேசுறேன்.
இப்போ
ரேகா அட்ரஸை சொல்லுடா
என்ற மாகா அவள் முகவரியை வாங்கிக் கொண்டு
கையில் சிறிது பணமும் தந்து விட்டு ஸ்டேசனை விட்டு நடந்தான்...

நினைத்தாலும் மறக்க முடியாதவை . 5


கதவை சாத்தி விட்டு சீனிவாசன் போகும் போது
வெளியே நின்ற போலீஸ்காரர்களிடம் ஏதோ சொல்ல
அவர்கள் சிரித்த சிரிப்பு
எனக்குள் என்னென்னவோ செய்தது

அது சிறை அல்ல
ஆனால் அந்த அறைக்குள்ளிருந்து
வெளியே நடப்பவற்றை பார்க்க முடியாது
மூடிய ஜன்னல்களைத் திறந்தால் கூட
அடுத்து இருப்பது ஒரு சுவர்

வெளியே
இடையிடையே போகும் வாகன சத்தங்கள்
அது இரவு என்பதை உணர்த்தியது
ஒரு சில போலீஸ் பூட்ஸ் சப்த்தங்கள்
தூரத்தேயிருந்து கேட்கத் தொடங்கும்

அது எவரோ என்னை நோக்கி வருகிறார்கள்
என்று மனதுக்குள் அச்சத்தைக் கொண்டு வரும்
நானிருக்கும் அறையை நெருங்கி ஓசை வரும் போது
என்னை நோக்கி வருவதாக மனம் படபடக்கும்

அந்த நபர்
அறைக்கு வெளியே உள்ள ஒருவரோடு
பேசிவிட்டு நகரும் ஒலி கேட்கும் போதுதான்
மனது ஆறுதலடையும்

மீண்டும் யாரோ வரும் ஓசை
அதே பதட்டம்.................

இது தொடர்ந்து கொண்டேயிருந்தது

சில வேளைகளில்
அப்படிக் தொடர்ந்து கேட்கும் ஒலிகளுக்குள்
நடந்து போகும் யாருக்கோ
ஒருவர் எழுந்து மரியாதை செய்வதற்காக
சல்யூட் அடிக்கும் சத்தம் கேட்கும்

அந்த சல்யூட் சத்தம்
ஒரு அதிகாரி நானிருக்கும்
அறையைக் கடந்து செல்கிறார் என்பதை
என்க்குள் உணர்த்தும்

அடுத்த பூட்ஸ் ஒலிகள் எல்லாம்
சாதாரண போலீஸ்காரர்கள் நடக்கும் சத்தமாக இருக்கலாம்

என் அறைக்கு வெளியே
என்னை கவனிக்க யாரோ ஒருவர் இருக்கிறார்

வெகு நேரத்தில் என்னால் உணர முடிந்தது அதைத்தான்

இடையே
ஒரு ஜீப் வந்து நிற்பதும்
யாரோ குரல் எழுப்புவதும் கேட்டது
அது எவரோ அடிக்கும் வலி தாங்காமல் கத்தும் சத்தம்

லத்தி ஒன்றால்
அடித்து அடித்து ஒருவரை
இழுத்துக் கொண்டு வருகிறார்கள் போலும்

தூரத்தே கேட்ட சத்தம்
என் அறையைத் தாண்டி சென்ற போது
அந்த மனிதனின் முனங்கல்
அந்தக் குளிரிலும் என்னை வியர்க்க வைத்தது

நாலைந்து பேர்
அந்த மனிதனை தாக்குவது போல
கேட்டது

அவன் எதையோ சொல்ல
அவர்கள் அவனை அடிக்கிறார்கள்
அவன் அமைதியாகிறான்
மீண்டும் அடிக்கிறார்கள்
அவன் மீண்டும் எதையோ சொல்ல முயல்கிறான்
மீண்டும் அடிக்கிறார்கள்
மீண்டும் அமைதியாகிறான்

நடப்பது தெரியவில்லை
ஆனால்
அவனிடம் எதையோ கேட்கிறார்கள்
அவன் சொல்ல தொடங்க அடிக்கிறார்கள்
அவர்கள் எதையோ கேட்க
ஒன்று இல்லை என்று சொல்கிறான்
அல்லது வாதாடுகிறான்
மீண்டும் அடிவிழும் போது
வாய் மூடி முனங்குகிறான்

மொழி புரியாத போது
இதைத்தான் என்னால் ஊகிக்க முடிகிறது

நிமிடத்துக்கு நிமிடம்
நான் உணரும் சத்தங்கள்
அச்சத்தையும்
வெறுப்பையும்
கோபத்தையும்
எனக்குள் வளர்க்கிறது

முதல் முறையாக
இப்படி வதைபடும் போது
"பழி வாங்கு" என்று
என்னுள் தூங்கிக் கிடந்த மிருகம்
விழித்துக் கொண்டு
என்னை எதற்கோ தயார் செய்கிறது

வாய் பேசாத
மிருகங்களே
தனது முடிவு எட்டுவதை உணரும் போது
எதிர்த்து நிற்கும் போது
நான் மட்டும் ஏன்
அமுங்கிப் போக வேண்டும்

அங்கே யாரோ ஒருவனுக்கு நடக்கும்
அதே சடங்கு
நாளை எனக்கும் நடக்கலாம்

நடப்பது நடக்கட்டும்
உள்ளே எத்தனை நாள் வைத்திருப்பார்கள்?

எப்படியும்
ஒருநாள் வெளியே வருவேன்
வந்ததும்
என்னை இப்படி ஆக்கியவர்களை
அழிக்காமல் இருக்க மாட்டேன்

அன்றைக்கு தெரியும் என்னை யாரென்று.............?

நான் அப்படி என்ன செய்தேன்?

அவர்கள் என்னோடு பேசியிருக்கலாம்

இல்லை
நீ என்னோடு பேசியிருக்கலாம்

சென்னையில் இருந்த என்னை
பெங்களூருக்கு அழைத்து வந்ததே நீதானே?

அங்கே எனக்கு மொழி தெரியும்
நண்பர்களைத் தெரியும்
என் பிரச்சனை தெரியும்

இங்கே உன்னைத் தவிர
யாரையும் எனக்கு சரியாகத் தெரியாது
தெரிந்தவர்கள் எல்லாம்
நெருக்கமாய் எனக்காக
எதையும் செய்யக் கூடியவர்கள் இல்லை
அத்தனையும் உனக்குத் தெரியும்

யாரோ
ஏதோ செய்கிறார்கள் என்றால்
நீயுமா?

பிரச்சனைகள் சூறாவளியாக
வந்த போதெல்லாம்
எனக்காக
என்னோடு இருந்தவள் நீ

எனக்கு
வாழ்வென்பது நிச்சயமில்லை
எப்போதும் எதுவும் நடக்கும் என்ற போது

"இல்லை ஜீவா
நான் எப்பவும் உங்களுக்காக இருப்பேன்
நான் யுத்த பகுதிகளில் வாழ்ந்தவள்.
இந்தியா பாகிஸ்தானோடு போர் புரிந்த போது
விழும் குண்டுகளுக்குள் அச்சமின்றி
ஓடி விளையாடிவள் நான்.
என்னை நம்புங்கள்
உங்களை நான் பார்ப்பேன்."
என்று தைரியம் கொடுத்தவள் நீ

இதெல்லாம் சரிப்படாது என்று
முரண்பட்ட அத்தனை சமயங்களிலும்
தேடித் தேடி வந்தவள் நீ

விரக்தியோடு
அதிரும் அத்தனை வேளைகளிலும்
என்னை
அழுத்தி அழுத்தி அரவணைத்தவள் நீ

சாப்பிட மறுத்து
நிற்கும் போது
சாப்பிடுங்க ஜீவா
உடம்பில பெலம் இல்லேண்ணா
ஓடக் கூடமுடியாது என்று
ஊட்டி விட்டவள் நீ

மரண பயம்
ஒவ்வொரு நிமிடமும்
என்னை குலுக்கி எடுத்த போது
அணைத்துக் கொண்டவள் நீ

செலவு செய்ய
ஒன்றுமே கையில் இல்லை என்று
எனக்குள் உடைந்து வீழ்ந்த போது
அதை சொல்லாமல் உணர்ந்து
நான் சொல்லாமலே
என் வாழ்கை செலவுகளை
எந்த எதிர்பார்ப்புமின்றி
கையிலெடுத்துக் கொண்டு செய்தவள் நீ

சென்னையில்
எப்பவும் நண்பர்களோடு திரியிறீங்க
எதாவது ஆகிட்டா என்னால தாங்க முடியாது ஜீவா
என்னோட பெங்களூர் போயிடலாம்
என்று அழைத்து வந்தவள் நீ

இப்போ மட்டும்
ஏன் ரேக்காம்மா
இப்படி பண்ணினே?

நான் என் பெத்தவங்களை பார்த்ததில்லை
என் அம்மா உன்னை மாதிரிதான் இருப்பாளோ
என்று நினைக்க வைத்தது நீ

என் இதயம் விம்மி வெடித்தது.

ரேக்காம்மா
ஏன் இப்படி பண்ணினே?

செத்துப் போடா என்று சொல்லியிருந்தா
சத்தியமா செத்திருப்பேன் ரேக்காம்மா!

நீ
யார் சொல்லையும் கேட்கக் கூடிவள் இல்லை

நீ கொடுக்காம
என் பாஸ்போட் எல்லாம்
போலீஸ் கைக்கு வர சான்ஸே கிடையாது?

அடுத்து
என் கடந்த கால வாழ்வு பற்றி
உன்னைத் தவிர யாருக்கும் தெரியாது
அது எப்படி போலீஸுக்கு தெரிஞ்சது
இதில உனக்கும் பங்கு இருக்கு

வேதனையும்
விரக்தியும்
மாறி மாறி என்னை தாக்கத் தொடங்கியது

இப்போ
முதலில நான் வெளிய வரணும்

வந்து
என்னை இப்படி ஆக்கினவங்களை
இல்லாமல் பண்ணனும்

ஒண்ணு
அத்தனை பேரோட நான் சாகணும்
இல்ல
எல்லாத்தையும் முடிச்சுட்டு
நான் எங்காவது தப்பணும்

இறுகிய மனதோடு
அறையில் கிடந்த பென்ஜில்
தூங்கும் போது
உருவாகிய வலி கூட தெரியவில்லை

வெளியே கேட்ட சத்தங்கள்
எனக்கு கேட்கவில்லை
மனம் வேறெங்கோ பயணித்துக் கொண்டிருந்தது
அந்த
அசதியோடு
அயர்ந்து போனேன்...

நினைத்தாலும் மறக்க முடியாதவை . 4




என்னை ஏற்றிக் கொண்டு வந்த போலீஸ் ஜீப்
போலீஸ் வளாகத்துக்குள் நுழைந்து நிற்கிறது

இறங்குமாறு சொல்லி
என்னை அழைத்துக் கொண்டு போகிறார் சீனிவாசன்.

இழுத்துக் கொண்டு போக வந்தவர்கள்
அழைத்துக் கொண்டு போவதில் மனசு ஆறுதல் அடைகிறது

இருந்தாலும்
உள்ளே வரவேற்பு எப்படி இருக்குமோ என்று
மனம் நினைத்துப் பார்க்கிறது

யாரையாவது பிடிக்கப் போனவுடனே
இறங்கினதும் யாருக்காவது
எதையாவது சொல்லி சாத்தணும்
அப்பதான் சுத்தி நிக்கிறவன் பயப்படுவான்
இல்லேண்ணா
போலீசுண்ணு பார்க்காம
நம்மள சாத்தினாலும் சாத்திடுவான் என்று
போலீஸ் நண்பர் ஒருவர்
ஒரு முறை சொன்ன பாடம் நினைவுக்கு வருகிறது

உள்ள போனதும்
போலீஸ் பலத்தை காட்டுறதுக்கு
நாலு தட்டாவது நிச்சயம் தட்டுவாங்க
இல்ல
லாடம் கட்டினாலும் கட்டுவாங்க

நாயகனில் கமல் வாங்கும் உதை ஞாபத்துக்கு வந்த போது
இதெல்லாம் தேவையா என்றது மனசு

உதறலாகவே இருந்தது

"பயப்படாதே
கதிர் சார் ரொம்ப மோசமானவர்தான்
இருந்தாலும் ரொம்ப நல்லவர்"

என்றவாறு என் கையை பிடித்துக் கொண்டு
என்னை அழைத்துச் செல்லும் சீனிவாசன் சொன்ன போது
என் உணர்வுகள் சீனிவாசனுக்கு
என் கைகளினூடாக வந்த குளிரும் நடுக்கமும்
சொல்லியிருக்க வேண்டும் என்றே தோன்றியது

உள்ளே போனதுதான் தாமதம்
உட்கார்ந்திருந்த
போலீஸ் அதிகாரி கதிர்
ஏதோ கெட்ட வார்த்தையை பேசிக் கொண்டு எழுந்த போது

"அடிச்சிடாதீங்க சார்
இதை முதல்ல பாருங்க" என்று
என்னிடம் இருந்த போட்டோ அல்பத்தை எடுத்து
கதிர் கையில் கொடுத்தார் சீனிவாசன்.

அல்பத்தை புரட்டிப் பார்ப்பதும்
என்னை முறைத்துப் பார்ப்பதுமாய்
சற்று நேரம் கோபமாக இருந்தார் கதிர்.

உட்கார் என்றார்

உட்காரப் போனேன்

இல்ல நில்லு

இன்னும் அந்த கோபம் குறையவே இல்லை.

போலீஸ் அதிகாரி கதிர்
கன்னடத்தில் எதையோ சொல்ல
என்னை வெளியே அழைத்து வந்த சீனிவாசன்
வெளியே இருந்த ஒரு அமர்வில் இருக்க வைத்து விட்டு

"ஓட நினைக்காதே
அப்புறம் அதுதான் இறுதியாக இருக்கும்
குடிக்க ஏதாவது வேணுமா?"

நான் பதில் கொடுக்காமல் இருந்தேன்.

ஒரு போலீஸ்காரரை அழைத்து
எனக்கு குடிக்க தண்ணி கொடுக்கும்படி சொல்லி விட்டு
என்னை பார்த்துக் கொள்ளும்படி வேறு
அந்த போலீஸ்காரரிடம் கண்ணைக் காட்டிவிட்டு
சீனிவாசன் போலீஸ் அதிகாரி கதிர் அறைக்குள் போனார்.

தண்ணியை தந்த போலீஸ்காரன்
"அந்தப் பொண்ணை ரொம்ப நாளா தெரியுமா?
சினிமா நடிகை மாதிரி இருக்கா...............
................................................................."
என்று அவன் பேசிய வார்த்தைகள்
அவன் எப்படிப்பட்டவன் என்பதை காட்டியது

என்னுள் வந்த கோபத்தை காட்டிக் கொள்ளாமல்
தலையை தொங்கப் போட்டுக் கொண்டேன்.

"கிடைச்சா அனுபவிச்சுடனும்யா
காதல் கீதல்ண்ணு பின்னால திரியக் கூடாது
இப்ப பாரு
உன்னை லாடம் கட்டப் போறங்க" என்று
மீண்டும் கிலியை மனதில் கொண்டு வந்தான்.

அவன் என்னை வெறுப்பேத்திக் கொண்டிருக்கும் போது
சீனிவாசன் என்னை அழைத்தார்.

நான் உள்ளே போனதும்
போலீஸ் அதிகாரி கதிர்

இந்த பொண்ணு யாரு?

அவ என் லவ்வர்.
4 வருசமா பழக்கம்.
மெற்றாசுல பாரீஸ் கார்னர்ல வேலை செஞ்சா
அப்போதிலயிருந்து தெரியும்........என்றேன்.

அவங்க அம்மா என்னவோ
ஒருத்தன் அவ பின்னாலயே திரியிறான்
வேலைக்கு கூட போக விடுறான் இல்ல
ரோட்டில வேற அவளுக்கு அடிக்க போயிருக்கான்
அது வேற நீ விடுதலைப்புலி
உன் அறை முழுக்க வெடி குண்டு இருக்கு
அதை வச்சு மிரட்டுறே
அப்படின்ணூ புகார் செஞ்சிருக்காங்களே?

இல்ல சார்
அவங்க பொய் சொல்றாங்க
அவங்க குடும்பத்துல எல்லாரையும் எனக்குத் தெரியும்.
அவங்க தங்கச்சியை கூட
என் தூரத்து உறவு பையன் ஒருத்தனுக்குத்தான்
கல்யாணம் பண்ணிக் கொடுக்க உதவி செஞ்சேன்.
அப்போ எடுத்த படங்கள்தான்
உங்க கையில இருக்கிறது
அதில அவங்க குடும்பத்தோட நான் இருக்கேன்

அப்போ விடுதலைப் புலி என்கிறது?

எனக்கு இதெல்லாம் தெரியாது சார்.

இதெல்லாம் என்ன?

அவர் மேசை டிராயருக்குள் வைத்திருந்து
என் பெயரில் இருந்த 3 கடவுச் சீட்டுகளையும்
இலங்கை அடையாள அட்டையையும் மேசையில் வைக்கிறார்.

இதயம் நின்று துடிக்கிறது.

பாதுகாப்புக்காக ரேகாவிடம் கொடுத்து வைத்திருந்த அவை
அவர் கையில் இருப்தை கண்டதும் அதிர்கிறேன்.

அலட்டிக் கொள்ளாமல்
பார்க்கலாமா சார்? என்கிறேன்.

ஒன்று எனக்குரிய கடவுச் சீட்டு.
அடுத்த இரண்டு வேறு வேறு பெயர்களில்
இருந்த நாட்டு கடவுச் சீட்டுகள்.

என் உண்மையான கடவுச் சீட்டு காலாவதியாகி பல காலம் ஆகியிருந்து.
அதற்குப் பின் நான் பாவித்தது
நான் இருந்த நாட்டு கடவுச் சீட்டு.
இன்னோன்று ரேகாவால் எடுக்கப்பட்டது.

அது காலாவதியாகிடுச்சு சார்
அடுத்ததுதான் எனது

இது?

3வது குறித்து எனக்குத் தெரியாது சார்

அதில இருக்கது உன் போட்டோதானே?

ஆமா

அப்போ.........இது உனக்கு தெரியாம முளைச்சுதா?

இல்ல சார்
சிங்கப்பூர் போறதுக்கு டிக்கட் மெற்றாஸ்லதான் வாங்குவேன்.
இவ டிராவல்ல மனேஜரா இருந்தா
ஒருமுறை டிக்கட் எடுக்கிறதுக்கு ரேகாவுக்கு
என் பாஸ்போட்டை கொடுத்து
டிராவல்ல தொலைஞ்சுட்டுதுண்ணு சொன்னாங்க.
அது இல்லெண்ணா என்ன
வேற ஒண்ணு எடுத்துத் தாரோமுண்ணு
கையெழுத்தும் போட்டோவும் வாங்கினாங்க
அது இதுவா இருக்கலாம்
ஆனா என் ஒரிஜினல் பாஸ்போட் கிடைச்சுது
அதனால இது பத்தி அவ சொல்லவே இல்ல
இப்போதான் இதை முதல் முறையா பார்க்கிறேன்

அவர் என் முகத்தை பார்த்தார்.

நான் அப்பாவி போல நின்றிருந்தேன்.

யாரையும் நம்பக் கூடாது
அவங்க அம்மா உன்னை யாரோ என்கிறாங்க
ஆனா
உன் பாஸ்போட் எல்லாம் அவங்க வீட்டில இருந்து
கொண்டு வந்து தாராங்க

அவர்கள் செய்த ஒரே ஒரு முட்டாள்தனத்தால்
என் பொய்யை அவர் நம்பினார்

என் பாதி பொருட்கள் கூட
அவங்க வீட்டிலதான் சார் இருக்கு

அப்போ கிறீன்லாண்ட்டில்?

மாத வாடகைக்கு
கிறீன்லாண்ட்டிலதான் தொடந்து தங்கியிருக்கேன்.
அது கூட ரேகா எடுத்து தந்ததுதான்
அதுக்கு கூட ரேகாதான் காசு கட்டுறா?

ஏன்
உன் கிட்ட பணமில்லையா?
அவவ மிரட்டடித்தான் பணம் பறிப்பியோ?


இல்ல சார்
நான் வச்சுக்கிறதில்ல.
அவதான் என் செலவுகளை பார்ப்பா...........
எனக்கு வீட்டில இருந்து பணம் வரும்.
அதை அவளுக்குத்தான் கொடுப்பேன்.

எந்த பாங்குக்கு பணம் வரும்?

கனரா பாங்க்.

அதை எடுத்துக் கொடுப்பியா?

இல்ல. செக் மூலம்......................

குனிந்து தலையை சொறிகிறார்.

அவங்க ரொம்ப பிராடு சார்
இவர் காசையெல்லாம் சாப்பிட்டிருங்க போல தெரியுது
என்று சீனிவாசன் எனக்காக கதிரிடம் பேசுகிறார்.

தொடர்கிறார்
இவர் அறையில யோகா படங்கள்தான் இருந்துச்சு.
அதுக்கப்புறம் அந்த தே........... படம்.

ஐயோ...........அவ அப்படி கிடையாது
என்று மனசு சொல்ல துடிக்குது
சார்..........................என்று இழுக்கும் போதே

உனக்கு வேற பொம்பளையே கிடைக்கல்லயா?

அவ அப்படி இல்ல சார்.
வேற யாரோ....................

உங்கள எல்லாம் செருப்பால அடிக்கணும்
வேற யாரோ இல்ல
அவங்க அம்மாதான் கம்பிளைன்ட் கொடுத்தது.
அவளும் வந்து இருந்தா
ஆனா அவ வெளிய இருந்தா...............

அதிலிருந்தே நடந்ததை சற்று ஊகிக்க முடிகிறது.

உன் பாங்க் புக்கை பார்க்கணும்.

அது கிறீன்லாண்ட்டில் இருக்கு சார்.

நாளைக்கு காலையிலயே
கிறீன்லாண்ட்டுக்கு சீனிவாசன் சாரோடு போய்
அதெல்லாம் எடுத்து வா

உனக்கு இங்க யாரையும் தெரியாது
உள்ள அடிச்சு கொன்னு போட்டாக் கூட
யாருக்கும் தெரியாது

உண்மை தெரியிற வரைக்கும்
சீனிவாசன் சொல்லுற அறையில இரு.
ஓட நினைச்சே...................

நான் பேசாமல் சீனிவாசனுடன் போனேன்.

கதிர் சார் ரொம்ப மோசமானவர்
முதல் முறையா நான் பார்த்து
அவர் கை வைக்கல்லேண்ணா
அது உனக்குத்தான்
ஆனா கதிர் சாருக்கு மேல இருக்கவர்
குடகு நாட்டுக்காரர்.
அவர் அவங்க பக்கம் எடுத்தா............
நாளைக்கு வரையும் இரு பார்க்கலாம்

சார்
அவ என் பணத்துக்கு ஆசைப்படுறவ இல்ல சார்.

இருந்தாலும்
அப்பிடி ஒரு கேஸ் போட்டு
உள்ளே வச்சு...............................

என் உடல் நடுங்கியது

உன்னை இவ்வளவு செஞ்சிட்டாங்க
இன்னுமும் பரிதாபப்படுறீயே
இங்க இரு
குளிரும் என்று ஒரு போர்வையை தந்து விட்டு
அறையை சாத்தினார் சீனிவாசன்.

கதவை சாத்தி விட்டு
வெளியே போலீசாரோடு என்னைப் பற்றி
ஏதோ சொல்லி விட்டுப் போக
அவர்கள் ஏதேதோ பேசிக் கொண்டார்கள்
சிரித்தார்கள்
எனக்கு ஒன்றுமே புரியவில்லை..............

நினைத்தாலும் மறக்க முடியாதவை . 3


என்னை ஏற்றிக் கொண்டு
ஜீப் நகரும் போதுதான் தெரிகிறது
பல ஜீப்புகள் அப் பகுதியை சுற்றி வழைத்திருந்தது.

அவை எம்மை பின் தொடருகின்றன.

சே..............
சென்னை போக இருந்தேன்
அடுத்த நாள் போகலாம் என்று
அன்று அங்கு தங்கியது தப்பாய் போனதே என நினைக்கிறேன்

இனி
நடப்பதற்கு முகம் கொடுக்க வேண்டும்
சில சமயம் இதுவே வாழ்வின் அஸ்தமனமாகியும் விடும்
அதுவே விதி என்றால் நடக்கட்டும்

ஜீப் சாதாரண வேகத்திலேயே நகர்கிறது
வயர்லெஸ் வழி பேசிக் கொள்கிறார்கள்
கன்னடம் சரியாக புரியாவிட்டாலும்
ஊகங்களின் அடிப்படையில் சற்று புரிகிறது

வாழும் ஒரு இடத்தில்
அந்த மொழி தெரியாமல் வாழ்வதின்
முட்டாள்தனம் எனக்குள் உறைக்கிறது
மொழி என்பது நாம் நினைத்தவுடன்
கடையில் விலை கொடுத்து வாங்கக் கூடியதல்ல
அதற்காக நாம்தான் முயல வேண்டும்
நாம் தேட வேண்டிவை அனைத்தும்
நம்மைத் தேடி வராது
நாமாகத் தேடிப் போனால் ஒழிய.............

ஆங்கிலத்தில் நாம் பேசலாம்
அது அவரவர் மொழி போல் வராது
அதை இன்னொருவர்
அவர் எண்ணத்தோடு மொழி பெயர்த்தாலோ
அல்லது
மொழி பெயர்ப்பவரது தொனி கடுமையானாலோ
நமது உணர்வுகளை விட
அவரது உணர்வுதான் வெளிப்படும்
அதையே மாற்றி சொல்லி விவாகாரமாக்கி விட்டால்
சொல்லவே வேண்டாம்
அதுவே நமக்கு விபரீதத்தை ஏற்படுத்திவிடும்

அவளை தெரிந்த நாள் முதல்
நான் எங்கு சென்றாலும்
அவளைத்தான் அழைத்துச் செல்வேன்

இந்தியாவில் பேசப்படும்
7 மொழிகளை பேசக் கூடியவள் அவள்

அவள் பேசினால்
அதை யாரும் எதிர்த்து பேச மாட்டார்கள்
பேச்சில் அத்தனை நயனங்கள் இருக்கும்
அவளும் அப்படித்தான்.....................

அவள்
கொடுகு மலைக் காற்றின் சுவாசத்தில் பிறந்தவள்
இந்தியாவின் முதலாவது ஜெனரலின் உறவுக்காரி
பிறந்த காலத்தில் வங்க தேச பிரிவுக்காய்
பாகிஸ்தானோடு இந்தியா போர் புரிந்த போது
காஷ்மீரில் குடும்பத்தோடு வாழ்ந்தவள்

நிலமை மோசமாக இருக்கிறது
குடும்பத்தை அனுப்பிவிடுங்கள் என்று
நிலமைகளை அவதானிக்கச் சென்ற
அன்னை இந்திரா காந்தி
அவள் தந்தையான
கொமான்டர் அன்னைய்யாவிடம் சொன்ன போது
பக்த்தில் நின்ற அவள் அன்னை
செத்தால் அவரோடு சாகிறோம்
வாழ்ந்தால் அவரோடு வாழ்கிறோம்
என்று பிடிவாதமாக நின்ற அவள் தாயோடு இருந்தவள்

என்னில்
கொள்ளைப் பிரியம் அனைவருக்கும்
அவர்களோடு அவள் ஊரான கர்னாடகத்தின்
அழகு ததும்பும் கொடகுக்கு போயிருக்கிறேன்

இந்தியாவில் அனுமதி இல்லாமல்
ஆயுதம் வைத்திருக்க அவர்களுக்கு அனுமதி உண்டு அங்கு

குடகு மலையை
அவளோடு சுற்றிய போது
மலையை விட அழகாக
மடுவான அவள்தான் என்னோடு நடந்தாள்

ஊரை எல்லாம்
என் கையை பிடித்து
சுற்றிக் காட்டிக் கொண்டு போன போது
ஊரை விட
அவள் குரலையும்
அவளையுமே ரசித்தேன்

"எல்லாத்துக்கும் சிரிங்க
எதையோ நினைச்சுக்கிட்டு மனசுக்குள்ள.................."

அவள் வாயில் அடிக்கடி வெளி வரும் வார்த்தைகள்

இப்பவும் அவள் அன்பை நினைத்தால்
இந்தப் பாடலைத்தான் கேட்பேன்

"குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி
எதோ நினவுதான் தன் உன்னை சுத்தி பறக்குது
என்னோட மனது தான் கண்ட படி தவிக்க்து
ஒத்த வழி என் வழி தானே மானே

மானே மயிலே மரகத குயிலே
தேனே நான் பாடும் தென்மாங்கே
-பூவே பொழுதே பொங்கி வரும் அமுதே
காதில் கேட்டயோ என் வாக்கே
உன்னை எண்ணி நான் தான் ஒரு ஊர்கோலம் போனேன்
தன்னம் தனியாக நிற்க்கும் தேர் போலா ஆனேன்"

இந்தப் பாடல்
அவளோடு வாழ்ந்த
இனிய நினைவுகளை என்னுள் மீட்டுச் செல்லும்

என்னவள் மூத்தவள்
டிராவல் கம்பனியில் மனேஜராக இருந்தாள்
ஒரு தம்பி கூட வீராட் கடற்படை கப்பலில் இருந்தான்

எனக்கும் அவளுக்கும்
சில தினங்களாக பிரச்சனை
இது அவளால் அல்ல
ஆனாலும் அவள் என்னை வெறுப்பவள் அல்ல
அவள் என்னை மாட்டி வைத்திருக்கமாட்டாள்?

ஆனாலும் அவள் குறித்து ஏன் பேசினார்கள்?

என் அறையில் இருந்த அவள் படத்தை பார்த்ததும்
என்னைக் கைது செய்ய வந்ததவர்களது
வேகம் குறைந்தது ஏன்?

நினைவுகளோடும்
சிந்தனைகளும்
அச்ச உணர்வுகள்
என்னை ஆக்கிரமிப்பதை உணர்ந்தேன்

எல்லாமே
அவளாகி இருந்ததால்
அவளைத் தவிர யாரிடமும்
இதுவரை
எதுவும் எதிர்பார்த்ததில்லை
அவளே என்னை கை விட்டால்
நான் யாரிடம் போவேன்?

புரியாத மொழி
புரியாத உணர்வுகள்
கிடைக்காதென்று தெரியும் உதவிகள்
தேடாத சொந்தங்கள் கொண்ட இடத்தில்
எனக்கு எது நடந்தாலும்
வெளியே தெரியப் போவதில்லை
அது எனக்குள் உறுத்தியது

இலங்கையில்
நான் வாழ்ந்த
கிராமத்தில் ஓடி விளையாடிய காலத்தில்
ஒரு புற்று இருந்த இடத்தை காட்டி
அங்கே ஓடித் திரியாதே என்று என் அம்மா கூறுவார்

அதற்கு காரணம்
அந்த புற்றிலிருந்து ஒரு நாகம் வெளியே வரும்
அதை பலர் நாகம்மா என்று அழைத்தார்கள்
சிலர் அந்த நாகம் குடிப்பதற்காக
முட்டை மற்றும் பால் வைப்பது வழக்கம்

என் கையில் முட்டை ஒன்று கிடைத்தால்
அதைக் கொண்டு போய் அங்கே வைத்து விட்டு
நாகம்மா வந்து முட்டையை குடிக்கும் வரை
சற்று தள்ளி உட்கார்ந்து காத்திருப்பேன்

ஒரு சில தினங்கள் மட்டுமே
அந்தக் காட்சி கிடைத்திருக்கிறது
பல வேளைகளில் என் அம்மா
பின்னால் வந்து போடும் பூசை அடி கிடைத்திருக்கிறது

அந்தப் புற்றுக்கு அருகே
யாரோ ஒரு காளியம்மனின் படத்தை வைத்து விட்டுச் செல்ல
அது காளியம்மன் புற்றாகி
அதைக் காக்க யாரோ
தென்னை ஓலையால் வேயப்பட்ட குடிசை
பின்னர் குடிசைக் கோயிலாகியது
இன்று அது புகழ் வாய்ந்த சக்தி கொடுக்கும் அம்மன் ஆலமாகி இருக்கிறது
நான் பாடசாலைக்கு போகும் போதெல்லாம்
ஒரு நிமிடம் மெளனமாக வணங்கி விட்டே போவேன்

எனது மனதில் ஏதாவது பாரம் என்றால்
அந்தக் குடிசைக் கோயிலை கும்பிடுவேன்
ஆனால் ஒரு தேவாரம் கூட சொல்லத் தெரியாது
என் மனதில் இருக்கும் பாரம் குறைந்து விடும்

சோதனைகள் வரும் போதெல்லாம்
அவளைத்தான்
அந்த அம்மனைத்தான்
மனதுக்குள் நினைப்பேன்
எப்பவும்
அந்தக் குடிசையும் புற்றுமே என் கண்ணுக்குள் வந்து போகும்

அவள் மேல்
என் அனைத்து பாரங்களையும் போட்டு விட்டு
எல்லாமே உன் கையில் என்று
இரு கைகளாலும் முகத்தை தழுவிக் கொண்ட போது
என் கைகள்
விலங்கிடப் படாமல் இருந்ததை உணர்ந்தேன்

ஜீப் போலீஸ் நிலையத்தின் முன்னால் வந்து நின்றது................

நினைத்தாலும் மறக்க முடியாதவை . 2


தலையனையை நனைக்க
கன்னத்தில் வழிந்த கண்ணீர்
போதும் என்பது போல காய்ந்திருந்தது.

எவர் எது பேசினாலும்
இறுகி நிற்கும் இதயம்
தனித்து இருக்கும் போது
புயலில் சிக்கிய வள்ளம் போல் தள்ளாடும்

பெரு மூச்சுகள் தொடரும்
அலை போல கண்ணீர் வழிந்தோடும்

நேரில் பார்ப்போருக்கு
அது புரியாது

மூன்று தினங்கள்
முறையான உறக்கம் இல்லை.
ஒரே ஒரு உடைதான் அந்த மூன்று நாளும் உடுத்தது

முகத்தை கழுவியதோடு சரி
தினசரி மாற்றிய உடை பழக்கம்
பல் துலக்கி விட்டு தூங்கும் மன ஒழுக்கம்
எல்லாமே தலை கீழாகி இருந்தது

மாலையில் யோகாசன வகுப்புக்கு சென்று வந்து
ஒரு கப் பால் அருந்தி விட்டு
சற்று நேரம் அமைதியாக தியானத்தில் ஈடுபடுகிறேன்.
நாள் முழுவதும் உள்ள களைப்பு தீருவது போன்ற ஒரு உணர்வு
இருப்பினும் மனது சலனமாக இருக்கிறது

ஒரு போதும் இல்லாத பதட்டம்
இரவின் மடியில் வீழ்கிறேன்.

திடீரென
அறைக் கதவு தட்டப்படும் ஓசை
எழுந்து கதவருகே வருகிறேன்
பலர் நிற்பது வெளியிலிருந்து வரும் ஒளியில் தெரிகிறது.

யாரது?

"போலீஸ் ,கதவைத் திற"
கடுமை
குரலில் தெரிகிறது.

கதவைத் திறந்ததும்
உள்ளே புகுந்த போலீசார் என்னை மடக்கி கட்டிலில் அழுத்துகிறார்கள்.

நான் முரண்டு பிடிக்காமல்
அவர்களுக்கு இடமளிக்கிறேன்.

ஆம்
எதிர்ப்பது முட்டாள்தனம்.

போலீசார்
அறை முழுவதும் எதையோ தேடுகிறார்கள்.

ஒன்றுமில்லை என்கிறார்கள்.

சற்று என்னை தளர்த்தி விட்டு
கட்டிலில் அமரச் சொல்கிறார் இன்ஸ்பெக்டராக தெரிபவர்.

உட்காருங்கள் என்கிறேன்.

"உன் அறையில் குண்டுகள் இருக்கிறது என தகவல்.
எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய்?"

நான் மெதுவாக சிரிக்கிறேன்.

இருந்தால் எடுங்கள் என்கிறேன்.

ஒரு போலீஸ்காரர்
என் அறைச் சுவரை அலங்கரிக்கும்
என் காதலியின் புகைப்படத்தை உற்று நோக்குகிறார்.

யார் இவர்?

என் காதலி...............

அவர் கன்னடத்தில் இன்ஸ்பெக்டரிடம்
இவரும் : இவரது அம்மாவும்தான் புகார் கொடுத்தவர்கள் என்கிறார்.

எனக்கு அது புரிகிறது.
பேசாமல் கேட்கிறேன்.
மனது கனக்கிறது.......................

இதற்கு என்ன சாட்சி.............. சார்ஜன் சீனிவாசன் கேட்கிறார்.

என்னை விடுங்கள்.
சில படங்களை காட்டுகிறேன் என்கிறேன்.

என் போட்டோ அல்பத்தை எடுத்துக் கொடுக்கிறேன்.

அல்பத்தை
பார்த்த சார்ஜன் சீனிவாசனின் கண்கள் கோபத்தால் சிவக்கிறது.

இதையும் எடுத்துக் கொண்டு ஸ்டேசனுக்கு போகலாம் வாங்க என்கிறார்.

கன்னடத்தில் ஏதேதோ பேசுகிறார்கள்.

வேகமான பேச்சு அரை குறையாக புரிகிறது.


வந்த போது இருந்த வேகம் இப்போது அவர்களிடம் இல்லை
சற்று தணிந்திருந்தது.

இப்படியே வரட்டுமா?

இல்லை.
உடுத்துக் கொண்டு வாங்க.

உடைகளை மாற்றிக் கொண்டு
அவர்களோடு நடக்கிறேன்.

வெளியே நிற்கும் ஜீப்பில் என்னை ஏறச் சொல்கிறார்கள்.

அது நகர்கிறது.......................